தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.. உருவாகிறது தொங்கு சட்டப்பேரவை? அதிமுக – தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு?

Hung Assembly In Tamil Nadu: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் 105 தொகுதிகளிலும், அதிமுக 78 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வரும் நிலையில், தொங்கு சட்டப்பேரவை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிமுக- தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.. உருவாகிறது தொங்கு சட்டப்பேரவை? அதிமுக - தவெக கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு?

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைகிறதா

Updated On: 

04 May 2026 11:09 AM

 IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றி கழகம் அசுர பலத்துடன் முன்னிலை வகுத்து வருகிறது. தற்போது வெளியான தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்பில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இதற்கு அப்படியே எதிர் புறமாக தமிழக வெற்றி கழகம் முதல் இடத்தையும், முன்னிலையையும் பெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிரடி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது என்னவெனில் தொங்கு சட்டப்பேரவை அமைந்து அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்கும் என்பதாகும்.

தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தமிழக வெற்றிக் கழகம்

தற்போதைய நிலவரப்படி தமிழக வெற்றி கழகம் 104 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 52 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்.

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு

ஆனால், தமிழக வெற்றி கழகம் 105 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 78, திமுக கூட்டணி 52 தொகுதிகள் என முன்னிலை வகித்து வருவதால். தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக வெற்றி கழகம் நேர் எதிராக எதிர்த்து வருவதால், அந்தக் கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை.

அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு

இதன் காரணமாக, அதிமுக மற்றும் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது. இதில், தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் தவெக முன்னிலை வகிப்பதால் முதல்வர் பதவியை கோர வாய்ப்புள்ளது. இதற்கு ஈடாக அதிமுகவினர் முக்கிய அமைச்சர்கள் பதவியே கேட்டு பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..