சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

AIADMK Candidate List For Election: மார்ச் 25ஆம் தேதியான இன்று, எடப்பாடி கே. பழனிசாமி தனது அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தையும் தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூரில் இருந்து இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு முன்னதாகவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

25 Mar 2026 10:10 AM

 IST

சென்னை, மார்ச் 25, 2026: தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. அதேபோல், நேற்றைய தினம் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் தேதியான இன்று அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.

வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல்:

முக்கியமாக, எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி போட்டியிடுகிறார். தமிழகத்தைப் பொருத்தவரையில், அதிமுக – திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இரு கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பெரம்பூரில் சொந்தமாக பங்களா வாங்கிய தவெக தலைவர் விஜய்? எதற்காக தெரியுமா?

மார்ச் 25ஆம் தேதியான இன்று, எடப்பாடி கே. பழனிசாமி தனது அடுத்த கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தையும் தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூரில் இருந்து இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு முன்னதாகவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக,

  • எடப்பாடி தொகுதி – எடப்பாடி கே. பழனிசாமி
  • வேப்பனஹள்ளி – கே.பி. முனுசாமி
  • திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்
  • நத்தம் – நத்தம் விஸ்வநாதன்
  • தொண்டாமுத்தூர் – எஸ்.பி. வேலுமணி
  • குமாரபாளையம் – தங்கமணி
  • ராயபுரம் – ஜெயக்குமார்
  • மயிலம் – சி.வி. சண்முகம்
  • மதுரை மேற்கு – செல்லூர் கே. ராஜு
  • பாலக்கோடு – கே.பி. அன்பழகன்
  • நன்னிலம் – ஆர். காமராஜ்
  • வேதாரண்யம் – ஓ.எஸ். மணியன்
  • விராலிமலை – சி. விஜயபாஸ்கர்
  • கோவில்பட்டி – கடம்பூர் ராஜு
  • திருமங்கலம் – உதயகுமார்
  • சிவகாசி – ராஜேந்திர பாலாஜி
  • மதுரவாயல் – பெஞ்சமின்
  • கலசபாக்கம் – அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
  • திருப்பரங்குன்றம் – பி.பி. ராஜன் செல்லப்பா
  • பவானி – கருப்பண்ணன்
  • ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி
  • கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்
  • அரியலூர் – எஸ். ராஜேந்திரன்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
துரந்தர் படத்தின் இயக்குநருக்கு கங்கனா ரணாவத் பாராட்டு
வழிவிட்ட பயணிகள் - தும்பிக்கையால் நன்றி சொன்ன யானை
ஒரு பிளம்பரின் ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் - அதிர்ச்சியில் நெட்டிஷன்கள்
உங்கள் சோகங்களை கேட்க வேண்டுமா? கட்டணம் ரூ.1000 - மும்பையில் கவனம் ஈர்க்கும் நபர்