தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் – எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில்வும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம்.. அனைவரும் வாக்களியுங்கள் - எடப்பாடி பழனிசாமி

கோப்பு புகைப்படம்

Published: 

21 Apr 2026 15:03 PM

 IST

ஏப்ரல் 21, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி காலை 7.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், ஏப்ரல் 21ஆம் தேதியான இன்று மாலை இந்த பிரச்சாரம் நிறைவடைகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. அதில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நிறைவுபெறும் பரப்புரை:

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை நந்தனம் பகுதியில்வும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியிலும் தங்களது பிரச்சாரங்களை நிறைவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: “அரசியல் சூதாடிகளைத் தூக்கி வீசுங்கள்”.. ‘விசில்’ புரட்சிக்கு அழைப்பு விடுத்த விஜய்!

தமிழ்நாட்டை காப்பாற்ற இறுதி யுத்தம்:

இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வரும் 23ஆம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கியது அதிமுக அரசு. வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: ரூ.600 கோடி சொத்துகளை மறைத்த சுந்தர் சி?.. தேர்தல் களத்தில் கிளம்பிய அதிரடிப் புயல்!

மேலும், “கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதம் இது. அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..