இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் – வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..

ADMK Election Manifesto 2026: அந்த வகையில் அதிமுக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.  இந்த 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இலவச ஃபிரிட்ஜ்.. ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் - வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

24 Mar 2026 18:14 PM

 IST

சென்னை, மார்ச் 24, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஒரு மாத காலமே இருக்கக்கூடிய சூழலில் தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன் புறமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதன்படி 297 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.  இந்த 297 வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

தமிழ்நாட்டின் முழுமையான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு சமூக நீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் அடிப்படையாக இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: திமுக – காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி இருக்கிறது.. விசிக தனித்து போட்டி – திருமாவளவன் அதிரடி

  • தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்
  • முதியோர்களுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ₹2000 ஆக உயர்த்தப்படும்
  • பெண்களின் முன்னேற்றத்திற்காக “குலவிளக்கு திட்டம்” கீழ் மாதம் ₹2000 வழங்கப்படும்
  • நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்
  • சொந்த வீடு இல்லாதவர்களுக்கு “அம்மா இல்லம்” திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்படும்
  • அரசு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
  • சிறுபான்மை இன மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வட்டி சலுகையுடன் கடன் வசதி வழங்கப்படும்
  • மூன்றாம் பாலினத்தவருக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்படும்
  • மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ₹12,000 ஆக உயர்த்தப்படும்
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்
  • ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக ₹1000 வழங்கப்படும்
  • 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
  • வங்கிகளில் பெற்ற கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

இவ்வாறு, பல்வேறு சமூகத்தினரின் அடிப்படை தேவைகள் மற்றும் நலனை கருத்தில் கொண்டு பல முக்கிய அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்