மக்கள் பிரச்சனை.. மீஞ்சூர் போரூராட்சியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..
ADMK Protest: தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 6, 2025ஆம் தேதி மீஞ்சூர் பேரூராட்சியில் மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோப்பு புகைப்படம்
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக தரப்பில் ஆளும் திமுக அரசை விமர்சித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவு வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளையும் ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெறுவதையும் கண்டும் காணாமல் இருந்து வரும் அரசை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டமானது நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 6, 2025 அன்று நடத்தப்பட உள்ளது. அதிமுக தரப்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஆளும் திமுக அரசு மற்றும் அதனுடன் கூட்டணி இருக்கும் கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் தமிழகத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகள் மற்றும் மக்கள் தேவையை முன்வைத்தும் பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து வருகின்ற 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மை டி.வி.கே செயலி.. 20,000 வாக்குச்சாவடி முகவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி..
அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:
இது தொடர்பான அவரது அறிக்கையில், “ மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தராமல் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு. இதற்கெல்லாம் விடிவுகாலம் வெகு விரைவில் வரவுள்ளது என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வகையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி உட்பட்ட இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இங்கு மழை நீர் வடிகால்வாய் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் படிக்க: சிறுமியுடன் எடுத்த செல்ஃபியை ஸ்டேட்டசில் வைத்த இளைஞர்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுமியின் அண்ணன்!
மேலும் மீஞ்சூர் காட்டூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பால பணிகள் தாமதமாக நடைபெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்வோர் வியாபாரிகளும் உள்ளிட்ட பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும் மக்களின் அத்யாவசிய அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் புதன்கிழமை காலை 10 மணி அளவில் மீஞ்சூர் போர் ஊராட்சி பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.