பெண்களுக்கான பெர்சனல் லோன் வழங்கும் வங்கிகள் – சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?
Loan Guide for Women: பெண்களுக்கு கல்வி, தொழில், மற்றும் திருமணம் ஆகிய தேவைகளுக்கு கடன் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் சில வங்கிகள் பெண்களுக்கு என பிரத்யேகமாக பெர்சனல் லோன் திட்டங்களை வழங்கி வருகின்றன. இதில் சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் தங்களின் கல்வி (Education), தொழில், மருத்துவ செலவுகள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக சில வங்கிகள் பெண்களுக்கு என பெர்சனல் லோன் (Personal Loan) திட்டங்கள் வழங்குகின்றன. நிதி சுதந்திரத்தையும், வாழ்க்கையில் நம்பிக்கையையும் உருவாக்கும் ஒரு முக்கிய கருவியாக இருக்கின்றன. இவை unsecured loans ஆகும். அதாவது, இவ்வகை பெர்சனல் லோன் பெற வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைக்க தேவையில்லை. பெண்களுக்கு தங்களது தனிப்பட்ட தேவைகளான கல்வி மருத்துவம், திருமண செலவுகள் (Marriage) போன்றவற்றிற்காக இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் அடமானம் வைத்து கடன் பெற தேவையில்லை. மேலும் பெண்களுக்கு என சில வங்கிகள் வட்டி விகிதங்களில் சலுகைகள் அறிவித்துள்ளன. மேலும் 12 மாதம் முதல் 60 மாதம் வரை திருப்பி செலுத்தும் வசதி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். மேலும் மிகுந்த குறைவான ஆவணங்களை சமர்பித்து விரைவில் கடன் பெறும் வசதி ஆகியவை இதில் சிறப்பம்சங்களாகும்.
பெண்களுக்கான பெர்சனல் லோன் பெற தகுதி என்ன?
மின்ட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் பெண்களுக்கான பெர்சனல் லோன் வழங்கும் வங்கிகள் மற்றும் வட்டி விகிதங்கள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
- இந்த திட்டத்தில் கடன் பெற 21 வயது முதல் 60 வயது வரையிலான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
- நிரந்தர ஊதியம் பெறுபவர்கள், தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மாத ஊதியம் பெறுபவராக இருந்தால் அவரது மாத வருமானம் ரூ. 15,000 முதல் இருக்க வேண்டும்.
- கிரெடிட் ஸ்கோர் மதிப்பு 685க்கு மேல் இருக்க வேண்டும்.
வங்கிகளின் வட்டி விகிதங்கள்
பெண்களுக்கான பெர்சனல் லோனுக்கு வங்கிகளில் விதிக்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். இவை நம் வருமானம், வேலை, கடன் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.
- ஸ்டேட்ட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இவ்வகை கடனகுக்கு 10.30 சதவிகிதம் முதல் 15.30 சதவிகிதம் வரை வட்டி நிர்ணயித்துள்ளன. மேலும் கடன் தொகையில் 1.50 சதவகிதிம் பிராசசிங் கட்டணமாக செலுத்த வேண்டிிருக்கும்.
- எச்டிஎஃப்சி வங்கியில் 10.90 சதவிகிதம் முதல் 24.00 சதவிகிதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியில் பெர்சனல் லோனுக்கு பிராசசிங் கட்டணமாக ரூ.6,500 செலுத்த வேண்டியிருக்கும்.
- எச்எஸ்பிசி வங்கியில் 10.15 சதவிகிதம் முதல் 16 சதவிகிதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் தொகையில் 2 சதவிகிதம் வரை பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- ஐசிஐசிஐ வங்கியில் 10.85 சதவிகிதம் முதல் 16.65 சதவிகிதம் வரை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொகையில் 2 சதவிகிதம் வரை பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- இண்டஸ் இண்ட் வங்கியில் 10.49 சதவிகிதம் முதல் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் பிராசசிங் கட்டணமாக கடன் தொகையில் 3.5 சதவிகிதம் செலுத்த வேண்டியயிருக்கும்.
- மேலும் கொடாக் மகிந்திரா வங்கியில் 10.99 சதவிகிதம் முதல் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியில் கடன் தொகையில் 5 சதவிகிதம் வரை பிராசசிங் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
- ஐடிஎஃப்சி வங்கியில் 10.70 சதவிகிதம் முதல் பெர்சனல் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பிராசசிங் கட்டணமாக கடன் தொகையில் 2 சதவிகிதம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
பல வங்கிகளை ஒப்பிட்டு சிறந்ததை தேர்வு செய்யவும். உங்கள் வயது, வருமானம் போன்றவற்றுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும். எனவே சரியான திட்டங்களை தேர்வு செய்வது அவசியம். கடன் வழங்கியதற்கு பிறகு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறதா என்பதையும் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். சில வங்கிகளில் சரியான ஆவணங்களை சமர்பித்தால் 24 மணி நேரத்தில் கடன் கிடைக்கும்.