உங்களிடம் ரூ.2000 நோட்டுகள் இருக்கா? ஈஸியா மாத்தலாம் – ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு
RBI Rs 2000 Update : இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நேரடியாகவோ, அல்லது தபால் மூலம் அனுப்பியோ ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகள் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000 நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி தற்போது வரை 98.44 சதவிகித 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை நீக்கி புதிய நடவடிக்கையை எடுத்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் 2026 ஆம் ஆண்டு மே 19 அன்று ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் படி 2000 ரூபாய் நோட்டுகளில் வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 அன்று பரிவர்த்தனையில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 நிலவரப்படி அந்த தொகை ரூ.5,551 கோடியாக குறைந்துள்ளது. இதன் மூலம் பெரும்பாலான ரூ.2000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டது தெளிவாகிறது.
இதையும் படிக்க : ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை!
2000 ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது?
மேலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான வசதி இந்திய ரிசர்வ் வங்கியின் 19 வழங்கல் அலுவலகங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி கடந்த 2023 மே 19 அன்று முதல் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. மேற்சொன்ன 19 அலுவலகங்களும் அகமதாபாத், பெங்களூரு, பெலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், நியூ டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேலும், 2023 அக்டோபர் 9 முதல், இந்திய ரிசர்வ் வங்கியின் வழங்கல் அலுவலகங்கள் வழியாக தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் ரூ.2000 நோட்டுகளை நேரடியாக தங்களின் வங்கி கணக்கில் வைப்பு செய்யும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : Gold Price : இரண்டாவது நாளாக தங்கம், வெள்ளி விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
தபால் மூலமும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றலாம்
இந்தியாவின் இந்தியாவில் எந்த தபால் நிலையத்தில் இருந்தும் இந்தியா போஸ்ட் மூலம் ரூ.2000 நோட்டுக்களை RBI Issue Offices என்ற முகவரிக்கு, தங்கள் வங்கி விவரங்கள் உள்ளிட்ட குறிப்புகளை எழுதி அனுப்பி, நாம் செலுத்தும் ரூ.2000 நோட்டுகளுக்கான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதனால் இன்னும் யாரிடமும் ரூ.2000 நோட்டுகள் இருந்தால் அவற்றை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலங்கள் நேரடியாக அளித்தோ அல்லது. தபால் மூலமாக அனுப்பியோ அதற்கு நிகரான தொகையை தங்கள் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது