நகை வாங்கப்போறீங்களா? தங்கம் மற்றும் வைரத்தின் மதிப்பை எப்படி சரிபார்ப்பது?

Jewellery Buying Tips: நகைகள் வாங்குவது அழகுக்காக மட்டும் அல்ல. அதன் மதிப்பு காலத்துக்கு ஏற்ப உயர்ந்துகொண்டே இருக்கும் என்பதால் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம், வைரம் வாங்கும் போது அதன் உண்மைத் தன்மை குறித்து தெரிந்துகொள்வது அவசியம். இந்த கட்டுரையில் தங்கம் மற்றும் வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

நகை வாங்கப்போறீங்களா? தங்கம் மற்றும் வைரத்தின் மதிப்பை எப்படி சரிபார்ப்பது?

மாதிரி புகைப்படம்

Published: 

20 Jun 2025 18:10 PM

 IST

நகை (Jewellery) என்பது வெறும் அழகுப் பொருள் மட்டுமல்ல. அது மிகப்பெரும் முதலீடும் கூட. நம்மில் பலர் நகைகள் வாங்கும்போது அதன் அழகு, வடிவம், பிராண்டு மற்றும் விலை ஆகியவற்றை மட்டுமே கவனிக்கிறோம். ஆனால், அந்த நகையின் உண்மையான தரம் மற்றும் மதிப்பு என்ன என்பது தெரியாமலே வாங்குகிறோம். வைரம் (Diamond) மற்றும் தங்கம் (Gold) மிகவும் மதிப்பு மிக்கது. மேலும் காலத்துக்கு ஏற்ப அதன் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கும். தங்கம் மற்றும் வைரத்தில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நமக்கு பொருளாதார ரீதியாக பாதுகாப்பை அளிக்கும். இதனால், ஒரு நகையின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியம். இந்தியா டிவியில் வெளியான கட்டுரையின் அபடிப்படையில் தங்கம் மற்றும் வைரத்தை எவ்வாறு மதிப்பிடுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைர நகைகளை எப்படி மதிப்பிடுவது?

வைர நகைகள் அதன் வெட்டப்பட்ட முறை (Cut), நிறம் (Colour) தூய்மை (Clarity), எடை (Carat)ஆகிய நான்கு சிக்களை (4 Cs) கொண்டு நிபுணர்கள் வகைப்படுத்துவர்.  இந்த நான்கு அம்சங்கள் சேர்ந்து ஒரு வைரத்தின் மதிப்பை தீர்மானிக்கின்றன. இதில், தூய்மை மற்றும் எடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. துாய்மை என்பது வைரத்தில் உள்ள இயற்கை குறைகளை பொறுத்து மிதப்பிடப்படும். பிரச்னைகள் இல்லாத தூய்மையான வைரங்கள் மிக அரிதாகவே கிடைக்கும். குறைவான பிரசனை உள்ளது, மிகவும் குறைவான பிரச்னை உள்ளது என்ற இரண்டு வகைகள் (Very Slightly Included) மிகவும் பிரலமானவை. சிறிய குறைகள் உள்ள வைரங்களும் நல்ல வெட்டுத்தன்மையுடன் இருந்தால் மிக அழகாகவே காட்சியளிக்கும். மேலும் வைரத்தின் தரம் குறித்த சான்றிதழ்கள் அதனை நமக்கு வெளிப்படையாக சொல்லும்.

வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டியது

ஒரு வைரம் உண்மையாகவா, செயற்கையா என்பதை அதன் சான்றிதழ் மூலமாகவே நிரூபிக்கலாம்.  குறிப்பாக ஜிஐஏ(GIA), (IGI) போன்ற நம்பகமான நிறுவனங்களின் சான்றிதழ்கள் வைரத்தில் 4சியின் மதிப்பை உறுதி செய்கின்றன. வைரத்தில் சான்றிதழ் எண் லேசர் மூலம் பொறிக்கப்படும். இது பின்னாட்களில் காப்பீடு மற்றும் மறு விற்பனைக்கு தேவையான முக்கிய ஆவணமாகும்.

தங்க நகைகளை எப்படி மதிப்பிடுவது ? 

தங்கத்தில் முக்கியமாக பார்க்கவேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. தங்கத்தை பொருத்தவரை காரட் ( Karat) என்பது துாய்மையை குறிக்கிறது. மேலும் ஹால்மார்க் (Hallmark) அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை பார்ப்பதும் அவசியம். தங்கத்தை பொறுத்தவரை 24 காரட் என்பது 100 சதவிகிதம் தூய்மையான தங்கம். இது மிகக் குறைவாகவே நகைகளில் பயன்படுத்தப்படும். மேலும் 22 காரட் என்பது 91.6 சதவிகிதம் தூய்மையானது. மேலும் இது 916 என்று அழைக்கப்படுகிறது. மேலும் 18 காரட் என்பது 75 சதவிகிதம் தூய்மையானது. மேலும் 14 காரட் என்பது 58.5 சதவிகிதம் தூய்மையான தங்கம் கொண்டது.  பெரும்பாலும் 22 மற்றும் 18 காரட் தூய்மை கொண்ட நகை  தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. காரணம் அதன் வலிமை.

தங்கம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

ஹால்மார்க் என்பது இந்தியாவில் பிஐஎஸ் (BIS – Bureau Of Indian Standards) மூலம் வழங்கப்படும் அடையாளமாகும். தங்கம் வாங்கும் பிஐஎஸ் லோகோ இருக்கிறதா என பார்க்க வேண்டும். எச்யூஐடி(HUID – Hallmark Unique Identification) என்பது நகைகளில் இடம்பெற்றிருக்கும். ஹால்மார்க் குறியீடு இல்லாத நகை வாங்கவே கூடாது.

காரட் என்பது வைரத்தின் எடையா? தங்கத்தின் தூய்மையா?

  • காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தை பொறுத்து அதன் பொருள் மாறுபடும்.  வைரத்தில் காரட் என்பது அதன் எடையைக் குறிக்கிறது.  குறிப்பாக 200 மில்லிகிராம் 1 காரட் என கணக்கிடப்படுகிறது.
  • தங்கத்தில் காரட் என்பது அதன் தூய்மையை குறிக்கும்.

வைரத்தில் காரட் அதிகமாக இருந்தால் விலை கூடும். குறி்பாக 0.50 அல்லது 1.00 காரட் என்பது மேஜிக் சைஸ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவை விலை அதிகமாக இருக்கும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்