தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
Avoid These Five Things While Getting Personal Loan | பெரும்பாலான நபர்கள் தங்களது நிதி தேவைகளுக்ககாக தனிநபர் கடன் வாங்குவர். இந்த நிலையில், தனிநபர் கடன் வாங்குவதற்கு முன்னதாக கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வீட்டை சீரமைப்பது, கல்வி, மருத்துவம், திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு தனிநபர் கடன் (Personal Loan) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய தேவைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் தனிநபர் கடன் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்த கடன்களை தவறாக பயன்படுத்துவது ஒருவருக்கு நிதி சிக்கலை ஏற்படுத்த காரணமாக அமைந்துவிடும். இந்த கடனில் செய்யும் சில தவறுகள் மூலம் நிதி ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தனிநபர் கடனை வாங்கும்போது செய்யவே கூடாத சில தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனிநபர் கடன் வாங்கும்போது செய்யவே கூடாத 5 தவறுகள்
தனிநபர் கடன்களை சிரமமாக்கி, நிதி இழக்கும் அபாயங்களை அதிகமாக்கும் இந்த 5 விஷயங்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேவைக்கு அதிகமாக கடன் எடுப்பது
தேவைக்கு அதிகமாக கடன் எடுப்பது நிதி சிக்கல்களுக்கு வழி வகுக்கும். காரணம், அதிக அளவிலான கடன் பெறும் போது திருப்பி செலுத்தும் தொகை அதிமாக இருக்கும். அதுமட்டுமன்றி, அதற்கான வட்டியும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தேவைக்கு அதிமாக கடன் எடுப்பது நிதி இழப்பை ஏற்படுத்த வழிவகுக்கும்.
இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. ஒப்புதல் வழங்கிய அரசு!
முக்கிய விஷயங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது
தனிநபர் கடனில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும். வட்டி விகிதம், கடன் வழங்குவதற்கான கட்டணம், மாத தவணை ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அவற்றை குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது சிக்கலை ஏற்படுத்திவிடும்.
வட்டி விகிதங்களை ஒப்பிட வேண்டும்
ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மாதிரியான வட்டி விகிதங்களை வழங்கும். வட்டி விகிதத்தில் இருக்கும் சிறிய மாற்றம் கூட பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திவிடும். எனவே பல வங்கிகளை விசாரித்து குறைந்த வட்டி வழங்கும் வங்கிகளில் கடன் பெறுவது சிறந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க : Post Office Scheme : மாற்றமில்லை.. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
ஒரே நேரத்தில் பல கடன்களை பெறுவது
பலரும் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடன் பெறும் தவறை செய்கின்றனர். இத்தகைய நடைமுறை கடுமையான நிதி சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்குவதை தவிர்ப்பது சரியானதாக இருக்கும்.
தாமதமாக அல்லது மாத தவணை செலுத்த தவறுதல்
மாத தவணைகளை முறையாக திருப்பி செலுத்துவது மூலம் தான் ஒருவரின் சிபில் ஸ்கோர் முறையானதாக இருக்கும். இந்த நிலையில், ஒரு மாத தவணையை கூட தாமதமாகவோ அல்லது செலுத்த தவறிவிட்டாலோ அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.