மாத சம்பளத்தில் 70% மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்.. மீதமுள்ள 30% என்ன செய்வது.. CA கூறுவதை கேளுங்கள்!
70 and 30 Rule for Smart Savings | பெரும்பாலான நபர்கள் தங்களது மாத சம்பளத்தை நிர்வகிக்க தெரியாமல் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் 70 மற்றும் 30 விதியின் படி மாத சம்பளத்தை திறம்பட கையாளுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பொருளாதாரம் என்பது மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. அதற்காக பலரும் கடுமையாக உழைத்து வருமானம் ஈட்டுகின்றனர். என்னதான் வருமானம் ஈட்டினாலும் சிலர் மிக கடுமையான நிதி சுமைகளை சந்திக்கின்றனர். இவ்வாறு பெரும்பாலான மக்கள் தங்களது சம்பளத்தை நிர்வகிக்க தெரியாமல் கடும் சவால்களை சந்திக்கும் சூழலில் ஜாக்டர் மணி (Zactor Money) நிறுவனத்தின் இணை நிறுவனர் அபிஷேக் வாலியா பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட நிதியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்து தனது லின்கிடுஇன் சிலவற்றை கூறியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்கள் மாத சம்பளத்தை முழுவதுமாக மைய்யப்படுத்தி இருக்காதீர்கள்
பெரும்பாலான மக்கள் தங்களது மாத சம்பளம் முழுவதையும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துவதை மிகப்பெரிய தவறாக அவர் கூறுகிறார். அதாவது மாத சம்பளத்தில் முழு தொகையையும் பயன்படுத்தாமல் பகுதி அளவு பணத்திற்கு திட்டமிட வேண்டும். குறிப்பாக ஒருவர் தனது மாத சம்பளத்தில் 100 சதவீத்தையும் பயன்படுத்தாமல், மாத சம்பளத்தில் இருந்து வெறும் 70 சதவீதம் பணத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.
இதையும் படிங்க : தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!
சிடிசி, போனஸ் கருத்தில் கொள்வது பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம்
பெரும்பாலான நபர்கள் தங்களது மொத்த சம்பளமான சிடிசி, போனஸ் ஆகியவற்றை கருத்தில் கொள்வர். ஆனால், அவை கண்ணுக்கு தெரியாதவையாக உள்ளன. மேலும், அவை மாதம் மாதம் வங்கி கணக்கில்,வரவு வைக்கப்படும் சமபளத்துடன் தொடர் இல்லாதவை. எனவே சிடிசி மற்றும் போனஸ் ஆகியவற்றை கருத்தில் கொள்ளலாமல், கைக்கு எவ்வளவு மாத ஊதியம் வருகிறதோ அதையே மையப்படுத்தி பொருளாதார திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
இதையும் படிங்க : Year Ender 2025 – இனி ஆதார் கார்டு தேவையில்லை – புதிய ஆதார் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?
மூதமுள்ள 30 சதவீதத்தை என்ன செய்வது?
மாத சம்பளத்தில் வெறும் 70 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்படுவதால் மீதமுள்ள 30 சதவீதத்தை என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். மீதமுள்ள 30 சதவீதத்தை எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
எனவே ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் சம்பளத்தில் வெறும் 70 சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.