Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இஎம்ஐ செலுத்தவில்லையா? உங்கள் போன் லாக் செய்யப்படலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்

Digital Lending Alert : லோன் வாங்கி ஸ்மார்ட்போன்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மாதத் தவணை செலுத்தாமல் இருப்பதாக சமீத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி தவணை செலுத்தாத வாடிக்கையாளர்களின் போனை லாக் செய்யும் முறையை நடைமுறக்கு கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஎம்ஐ செலுத்தவில்லையா? உங்கள் போன் லாக் செய்யப்படலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Sep 2025 15:18 PM IST

லோன் மூலம் ஸ்மார்ட்போன் (Smartphone) வாங்கி அதற்கான மாதத் தவணையை செலுத்தாமல் தவிர்க்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த கடன்களை வசூலிக்க இந்திய ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களிடம் இருந்து கடன் பெற்று ஸ்மார்ட்போன் வாங்கியவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க அவர்களின் போனை லாக் செய்வதற்கான உரிமையை பெற வாய்ப்புள்ளது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாம் மாதத் தவணையை முறையாக செலுத்தவில்லை என்றால், அதற்காக உங்கள் ஸ்மார்ட்போனை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் லாக் செய்யலாம். நீங்கள் கடன் தொகையை சரியாக செலுத்தும் வரை உங்கள் போனை உங்களால் பயன்படுத்த முடியாது.

இஎம்ஐ செலுத்தாதவர்களின் போனை லாக் செய்யும் திட்டம்

கடந்த ஆண்டு வாடிக்கையாளர் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்ற புகார்களின் அடிப்படையில் இத்தகைய மொபைல் லாக் நடைமுறையை இந்திய ரிசர்வ் வங்கி தற்காலிகமாக நிறுத்தியது. அந்த நேரத்தில் கடன் வழங்கும் நிறுவனங்கள் போன் வாங்கும்போது சிறப்பு ஆப் ஒன்றை நிறுவி தவணை செலுத்தாத நிலையில் போனை லாக் செய்தது.  தற்போது வாடிக்கையாளரிடம் அனுமதி பெறப்பட்டால் தான் இந்த போன் லாக் முறை நடைமுறைக்கு வரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது நிதி நிறுவனங்கள் இந்த போன் லாக் முறைக்கு அனுமதி அளித்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படும்.

இதையும் படிக்க : மொபைல் ஆப்களில் கடன் பெறுவது உண்மையில் பாதுகாப்பானதா? – கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதிக்கப்படுமா?

போன் லாக் செய்யும்போது வாடிக்கையாளர்களின் பிரைவசி பாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் போன் லாக்க செய்யும் போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படவுள்ளது. சிறிய கடன்களை வசூலிக்க வங்கிகளுக்கு உதவும் நோக்கத்தோடு கொண்டுவரப்படுவதாகவும், வாடிக்கையாளர்களின் டேட்டா இதன் மூலம் பாதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தால் பஜாஜ் ஃபைனான்ஸ், டிஎம்ஐ ஃபைனான்ஸ், சோழ மண்டலம் ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்கும் முறை எளிதாகும். இதனால் குறைந்த கிரெடிட் ஸ்கோர் உளஅளவர்களுக்கும் கடன் பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : 3 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு பிறகு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?

சமீபத்தில் மேற்கொள்ளப்பட் ஆய்வில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான கடன்கள் தான் மக்கள் தவணை செலுத்தாமல் தவிர்க்கின்றனர் என தெரியவந்துள்ளது. மேலும், இதில் ஸ்மார்ட்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும் கடன்கள் அதிவேகமாக உயர்ந்து வருகின்றன.