இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு தலைவராகும் தமிழர் – யார் இந்த ஆர்.துரைசாமி?

Govt Appoints New LIC Chief : இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC)-யின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக (MD & CEO) ஆர். துரைசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழரான இவரது பின்புலம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனத்துக்கு தலைவராகும் தமிழர் - யார் இந்த ஆர்.துரைசாமி?

எல்ஐசியின் சிஇஓவாக பொறுப்பேற்கவிருக்கும் துரைசாமி

Published: 

15 Jul 2025 17:42 PM

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation)  மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.  டிஎன்ஏ செய்தி இணையதளத்தில் வெளியான தகவலின் படி எல்ஐசியின் மொத்த மதிப்பு ரூ.5.79 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. இவ்வளவு மதிப்புமிக்க நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாக ஒரு தமிழர் நியமிக்கப்படவிருக்கிறார்.  அவர் வேறு யாரும் இல்லை, ஆர்.துரைசாமி தான் எல்ஏஐசியின் தலைவராக பொறுப்பேர்கவிருக்கிறார்.  இதனை நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை அறிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஆர்.துரைசாமி வருகிற ஆகஸ்ட் 29, 2025  அன்று பதவியேற்கவிருக்கிறார்.

தற்போது 59 வயதாகும் துரைசாமி தனது 62 வயது வரை பதவியில் இருப்பார். அதாவது 3 ஆண்டுகள் மட்டும் பதவியில் இருப்பார் என கூறப்படுகிறது. இவ்வளவு பெருமைவாய்ந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைசாமி யார், அவர் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் என்பது குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: 70 முறை நிராகரிப்பு…. ரூ.6,700 கோடி மதிப்பில் நிறுவனம் – ரேபிடோ நிறுவனர் ஜெயித்த கதை

38 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம்

எல்ஐசியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆர்.துரைசாமி மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறைகளில் 38 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கிறார். மேலும் எல்ஐசி நிறுவனத்தில் பல முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். எல்ஐசியின் மார்க்கெட்டிங் பிரிவில் மாநில மேலாளராக இருந்திருக்கிறார். மேலும் தகவல் தொழில்நுடப் பிரிவில் செயல் இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். சென்னை அலுவலகத்தின் வட்டார மேலாளராக பென்சன் மற்றும் குரூப் காப்பீடு திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். மேலும் கேரளாவின் கோட்டயம் பிரிவில் சீனியர் மேனேஜர் பதவி வகித்திருக்கிிறார். மேலும் சென்னை, தஞ்சாவூர், புனே ஆகிய பிரிவுகளில் மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்திருக்கிறார்.

தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் துரைசாமி குறித்து எல்ஐசியின் எக்ஸ் பதிவு

 

இதையும் படிக்க: எல்ஐசி பாலிசிக்கு எதிராக கடன் பெறலாமா? அதற்கான தகுதிகள் என்ன?

எல்ஐசி நிறுவனத்தின் மொத்த நிர்வாக அமைப்பில், நான்கு மேனேஜிங் டைரக்டர்ஸ் உள்ளனர். அவர்களில் ஒருவராக பதவி வகித்த துரைசாமி தற்போது ஒட்டுமொத்த எல்ஐசியின் தலைவர் மற்றும் சிஇஓ என்ற உயரத்தை அடைந்திருக்கிறார்.

யார் இந்த துரைசாமி?

துரைசாமி மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலிருந்து கணித பிரிவில் பட்டம் பெற்றவர். மேலும், புனேவில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் அகாடமியில் உதவி ஆய்வாளராக இருந்த காலத்தில் மைக்ரோ இனசூரன்ஸ், காப்பீட்டு சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள். புதிய காப்பீட்டு தயாரிப்புகள், பொதுக் காப்பீட்டு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.

தனது ஓய்வு நேரங்களில் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட துரைசாமி, தோட்டக்கலை, விளையாட்டிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் மதிப்பு தற்போது ரூ.5.79 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.  தற்போது துரைசாமியின் தலைமையின் கீழ் எல்ஐசி நிறுவனம் மேலும் பல உயரங்களை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான அனுபவம், ஆழமான தொழில்நுட்ப அறிவு கொண்ட துரைசாமி எல்ஐயின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.