பான் கார்டு முதல் வருமான வரி வரை.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

Major Changes From April 01, 2026 | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். இந்த நிலையில், ஏப்ரல் 01, 2026 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பான் கார்டு முதல் வருமான வரி வரை.. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Mar 2026 16:20 PM

 IST

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். 2026, மார்ச் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. விரைவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதமும் ஆதார் கார்டு, பான் கார்டு, வருமான வரி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த நிலையில் 2026, ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் விலை

ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்த நிலையில்,  ஏப்ரல் மாதம் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Gold Price : பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.7,600 சரிந்த தங்கம் விலை!

பான் கார்டு

இதுவரை பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், ஏப்ரல் 01, 2026 முதல் அது முற்றிலுமாக மாற உள்ளது. அதாவது ஏப்ரல் முதல் பிறந்த தேதியை உறுதி செய்வதற்கான ஆணவனங்களையும் ஆதார் கார்டுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டியதற்கான விதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு, ரூ.5 லட்சத்திற்கு மேல் வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ரூ.20 லட்சத்திற்கு மேலான சொத்து பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ரூ.1 லட்சத்திற்கு மேல் ஓட்டல்களில் பணம் செலுத்தினாலோ, நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்தாலோ பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரி மாற்றங்கள்

வருமான வரி விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் ஏப்ரல் 01, 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.

  • இனி டிஜிட்டல் கரன்சியான கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறைக்கு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியில் டிஜிட்டல் கரன்சியான சிபிசிடி அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?

ஏடிஎம் விதிகள்

இந்தியாவில் வங்கிகள் ஏர்பல் 01, 2026 முதல் சில முக்கிய மாற்றங்களை அமலுக்கு கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த புதிய விதிகள் பணம் எடுக்கும் வரம்பு, இலவச பண பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்