ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்?.. உண்மை இதுதான்!

Lower Interest Rates for Women | பெண்கள், ஆண்கள் என அனைவரும் வங்கிகளில் கடன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. அது உண்மைதானா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள்?.. உண்மை இதுதான்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

18 Aug 2025 11:14 AM

பொதுமக்கள் தங்களுக்கு நிதி தேவைகள் ஏற்படும்போது வங்கிகளில் கடன் (Bank Loan) வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு கடன் வழங்கும் வங்கிகள் அவற்றுக்கான வட்டியையும் விதிக்கும். இந்த கடன் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். இந்த நிலையில், ஆண்களை விட பெண்களுக்கு குறைவான வட்டியில் வங்கிகள் கடன் வழங்குவதாக ஒரு கருத்து உள்ளது. உண்மையாகவே ஆண்களை விட பெண்களுக்கு குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறதா, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு கடன் வட்டி விகிதம் குறைவா?

ஆண்களை விட பெண்கள் குறைவான வட்டியில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் அதற்கு வங்கிகள் ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன என்று அர்த்தம் இல்லை. ஆண்களை விட பெண்களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுவதற்கு ஒருசில காரணிகள் உள்ளன. அதன் காரணமாகவே அவர்களுக்கு ஆண்களை விட சற்று குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது.

இதையும் படிங்க : தனிநபர் கடன் Vs தங்க நகை கடன்?.. இந்தியாவில் நிதி தேவைக்கு எது சிறந்தது?

ஆண்களை விட பெண்களுக்கு வட்டி குறைவாக கடன் கிடைப்பது ஏன்?

கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆண்களை விட பெண்களை அதிகம் நம்புகின்றன. இது குறித்த பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால் பெண் வாடிக்கையாளர்கள் ஆபத்து குறைந்தவர்கள். கடனை முறையாக திருப்பி செலுத்துவது, வங்கியிடம் முறையாக நடந்துக்கொள்வது, முறையாக பதில் அளிப்பது உள்ளிட்ட காரணிகளை மையப்படுத்தி பெண் வாடிக்கையாளர்களை ஆண்களை விட சிறந்தவர்களாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க : GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!

பெண்களுக்கு கடன் வாங்கும்போது வங்கிகள் வழங்கும் சலுகைகள்

கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மட்டுமன்றி மேலும் சில சிறப்பு சலுகைகளையும் பெண்களுக்காக வங்கிகள் வழங்குகின்றன.

குறைந்த செயலாக்க கட்டணம்

சில வங்கிகள் பெண்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்களிடம் இருந்து மிக குறைந்த செயலாக்க கட்டணத்தை (Processing Fee) வசூலிக்கின்றன.

கடன் வழங்கும் வாய்ப்பு

வேலைக்கு செல்லும் மற்றும் தொழில் செய்யும் பெண்களுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன. இதில் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

கடனை திருப்பி செல்லும் முறையில் சலுகை

வங்கிகள் கடன் வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாத தவணை (EMI – Every Month Installment) முறையில் மாற்றங்களை மேற்கொள்கின்றன. அதாவது சிலர் வேலைக்கு செல்வர், சிலர் தொழில் செய்வர் அல்லது பகுதி நேர வேலைக்கு செல்வர். இந்த நிலையில், அவர்களின் வருமானத்தை பொருத்து வங்கிகள் அவர்களுக்குக்கான மாத தவணையை நிர்ணயம் செய்கின்றன.