உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்துவிடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!
Is Your Monthly EMI Taking All Your Earning | தற்போது பெரும்பாலான பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல் என்றால் அது மாத தவணை முறை தான். தங்கள் வருமானம் முழுவதையும் மாத தவணைகள் எடுத்துக்கொள்வதாக நினைக்கும் பொதுமக்கள் இந்த சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

மாதிரி புகைப்படம்
இந்தியர்கள் மத்தியில் மிகவும் பரவலாக உள்ள ஒரு நிதி நடவடிக்கை என்றால் அது மாத தவணை (EMI – Every Month Installment) முறை தான். முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், அதற்கான தொகையை சேமித்த பிறகே அந்த பொருளை வாங்க முடியும். ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லை. பொருட்களை முன்கூட்டியே வாங்கிக்கொண்டு அதற்கான தொகையை ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். பொருட்கள், பணம் என பலவற்றுக்கும் தற்பொது மாத தவணை முறை வசதி உள்ளது. இதன் காரணமாக பலரும் மாத தவணை என்னும் வலையில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், சம்பாதிக்கும் பணம் முழுவதும் மாத தவணைக்கே செல்லாமல் பாதுகாக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாத தவணை செலுத்துபவர்கள் செய்ய வேண்டியவை
1. உங்கள் மாத செலவுகளை கண்கானியுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணம் எந்த இடத்தில் வீணாக செலவாகிறது, எந்த இடத்தில் உங்களால் பணத்தை சேமிக்க முடியும் என்று உங்களுக்கு ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும்.
2. எல்லா கடன்களும் ஒரு மாதிரியான இயல்பில் இருக்காது. உதாரணமாக ஒரு கடனுக்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தால், மற்றொரு கடனுக்கு சற்று அதிகமாக இருக்கும். எனவே கிரெடிட் கார்டு போன்ற அதிக வட்டி கடன்களை முதலில் திருப்பி செலுத்திவிடுங்கள்.
3. எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத நிதி தேவை அல்லது சிக்கல்கள் ஏற்படலாம். எனவே மூன்று முதல் 6 மாத செலவுக்கான பணத்தை சேமித்து வைப்பது எதிர்பாராத நிதி சிக்கல்களை சமாளிக்க உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிரடியாக குறைப்பு.. விலை குறைய வாய்ப்பு?
இஎம்ஐ உங்கள் பணத்தை குடிக்காமல் இருக்க இந்த 5 விஷயங்கள் கட்டாயம்
- மாதம்தோறும் செலவுகளை கணக்கிட்டு, அத்தியாவசியமற்ற செலவுகளை குறைக்க வேண்டும்.
- அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் அடைத்துவிட்டு, குறைந்த வட்டி கொண்ட கடன்களை நிதானமாக அடைக்கலாம்.
- நிதி பாதுகாப்பை மேம்படுத்த அவசரகால நிதியை உருவாக்க வேண்டியது கட்டாயம்.
- மாத தவணைகளை உரிய நேரத்திலோ அல்லது முன்கூட்டியோ செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- பழைய கடன்களை அடைக்கும் வரை புதிய கடன்களை வாங்காமல் இருப்பது நிதி சிக்கல்களில் இருந்து விடுதலை வழங்கும்.
இதையும் படிங்க : மார்ச் 31-க்குள் இவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத தவணை செலுத்தும் நபராக இருந்தால், மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.