Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் மாதம் ரூ.5,500 பெறலாம்.. எப்படி தெரியுமா?

Post Office Monthly Income Scheme | தபால் நிலையங்கள் மூலம் அரசு செயல்படுத்தும் ஒரு அசத்தலான திட்டம் தான் இந்த தபால் நிலைய மாத வருமான திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற முடியும்.

ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் மாதம் ரூ.5,500 பெறலாம்.. எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Apr 2025 20:31 PM IST

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் பொருளாதாரம் (Economy) என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பாதுகாப்பான பொருளாதாரம் இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் போய்விடும். மனிதர்களின் வாழ்வை பொருத்தவரை எப்போது வேண்டுமானாலும் மருத்துவம், உயிரிழப்பு உள்ளிட்ட பெரிய சிக்கல்கள் ஏதேனும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழல்களை சமாளித்து அவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பொருளாதாரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழலில் போதுமான பொருளாதாரம் இல்லை என்றால் சிக்கல்களில் இருந்து வெளியே வர முடியாமல் போய்விடும்.

ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் பணம் வரும்

எனவே தான் ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால மற்றும் அவசர தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பெரிய தொகை வரும்போது அதனை வீணான முறையில் செயலவழிக்காமல் அதனை முதலீடு செய்யும் பட்சத்தில் அது எதிர்கால தேவைகளுக்கு மிகுந்த பலனை வழங்கும். இவ்வாறு சேமிப்பு மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் பணம் கிடைக்கும் ஒரு அசத்தலான திட்டம் குறித்து பார்க்கலாம்.

தபால் நிலைய மாத வருமான திட்டம்

அரசு தபால் நிலையங்கள் மூலம் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகை திட்டங்களில் ஒன்றுதான் தபால் நிலைய மாத வருமான திட்டம் (Post Office Monthly Income Scheme). இந்த திட்டம் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற விரும்பும் நபர்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் தனியாகவும், இரண்டு பேர் இணைந்தும் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் நீங்கள் ரூ.1,000 முதலே முதலீடு செய்யலாம். இந்த நிலையில், தனி நபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தபால் நிலைய மாத வருமான திட்டத்தில் நீங்கள் தனி கணக்கு தொடங்கி ரூ.9 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.3,33,000 வட்டியாக மட்டுமே கிடைக்கும். இந்த பணத்தை நீங்கள் மாதம் மாதம் ரூ.5,550 என பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதம் மாதம் ரூ.5,550 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.