GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?

Gold and Silver Price Will Drop | இந்தியாவில் நடைமுறையில் உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வெறும் இரண்டு அடுக்குகளாக குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டியில் வரும் இந்த முக்கிய மாற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

05 Sep 2025 13:07 PM

 IST

ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) வரி விதிப்பு முறையில் மத்திய அரசு முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பல பொருட்களின் விலை அதிரடியாக குறைய உள்ளது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ள உள்ள மாற்றம் காரணமாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்,  ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், உண்மையாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரப்போகும் முக்கிய மாற்றம்

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வர உள்ளது. அதாவது, 5%, 12%, 18%, 28% என உள்ள 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைய உள்ளது. இது குறித்து செப்டம்பர் 03, 2025 அன்று நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை வெறும் இரண்டு அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இதையு படிங்க : GST 2.0 : டூத் பேஸ்ட் முதல் கார் வரை.. அதிரடியாக குறைந்த ஜிஎஸ்டி.. விலையும் குறையும்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த முக்கிய மாற்றம் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வர உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு முறை மாற்றம் காரணமாக சில பொருட்களின் ஜிஎஸ்டி குறையவும், சில பொருட்களின் ஜிஎஸ்டி ரத்து செய்யப்படவும் உள்ளது. இந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஜிஎஸ்டியும் குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு எழுந்து வருகிறது. ஆனால், தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஜிஎஸ்டியை அப்படியே வைத்திருக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : GST 2.0 : பால் முதல் புற்றுநோய் மருத்து வரை.. இந்த பொருட்களுக்கு இனி ஜிஎஸ்டி இல்லை.. பட்டியல் இதோ!

அதாவது தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஏற்கனவே அமலில் உள்ள 3 சதவீத ஜிஎஸ்டியும், நகை தயாரிப்பு கட்டணங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும் தொடர்ந்து பொருந்தும். உதாரணமாக நீங்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகையை வாங்கினால் ரூ.3,000 ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
PPF : ரூ.12,500 முதலீடு செய்து ரூ.40 லட்சம் பெறலாம்.. அசத்தம் அஞ்சலக பிபிஎஃப்.. முதலீடு செய்வது எப்படி?
Gold Price : இன்னும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும்?.. நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!
UPI New Limit : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!
ஜிஎஸ்டி குறைப்பு… 40 இஞ்ச் டிவி மற்றும் 1.5 டன் ஏசியின் விலை எவ்வளவு குறையும்?
Credit Card : கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா?.. இந்த தவறை செய்யாதீர்கள்.. வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்!
குறையும் கார்களின் விலை… கார் லோனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் வங்கிகள் – எது சிறந்தது?