அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!

Lend Money to Government and Get Interest | பெரும்பாலான நபர்கள் வட்டிக்கு கடன் தருவதை வழக்காம கொண்டுள்ளனர். இந்த நிலையில், சாமானிய மக்களுக்கு மட்டுமன்றி, அரசுக்கும் கடன் வங்கி அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வைத்து லாபம் பெறலாம்.

அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்.. எப்பட.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

31 Oct 2025 11:37 AM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் பாதுகாப்பான பொருளாதாரம் வேண்டும் என்றால் முதலீடு (Investment) செய்வது தான் சிறந்தது என உணர்ந்த் பொதுமக்கள் சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் தாங்கம் முதலீடு செய்ய உள்ள திட்டம் தங்களது பணத்துக்கான பாதுகாப்பை, சிறந்த பலன்களை வழங்க வேண்டும் எனவும் நினைக்கின்றனர். அவ்வாறு பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பொதுமக்களுக்கான அசத்தலான ஒரு திட்டம் உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசுக்கு வட்டிக்கு பணத்தை கொடுத்து லாபம் பெறலாம்

வங்கிகள், நிறு நிறுவனங்கள் மட்டுமன்றி தனி நபர்களும் வட்டிக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். காரணம் தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு கூடுதல் பணம் கிடைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் பலரும் வட்டிக்கு பணத்தை கொடுக்கின்றனர். இவ்வாறு பொதுமக்களுக்கு கடன் தருவதை போலவே அரசுக்கு கடன் கொடுத்து அதன் மூலம் வட்டி ஈட்டி லாபம் பெறலாம் என்றால் நம்ப முடிகிறதா. உண்மை தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) வழங்கக்கூடிய ஒரு சிறப்பான முதலீட்டு திட்டத்தில் இது சாத்தியமாகிறது.

இதையும் படிங்க : Home Loan : வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ஆர்பிஐ அசத்தல் அறிவிப்பு!

குறைந்து ஆபத்து கொண்ட முதலீடுகளாக உள்ள அரசு பத்திரங்கள்

அரசு பத்திரங்கள் குறைந்த ஆபத்து கொண்ட முதலீட்டு அம்சமாக உள்ளன. உங்களிடம் கனிசமான தொகை இருக்கிறது, ஆனால் அதனை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் என நினைத்தால் உங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஓய்வூதியம் பெறும் நபர்கள் தங்கள் ஓய்வுக்கு பிறகு தங்களளுக்கு கிடைக்கும் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க : பெண்களுக்கு அதிக லாபத்தை தரும் அசத்தல் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!

கடன் பத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன

அரசு ஏதேனும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு நிதி திரட்ட இந்த பத்திரங்களை வெளியிடும். ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை முதிர்ச்சி அடையும் வகையில் இந்த திட்டங்கள் முதலீட்டுக்கு வழங்கப்படும். இந்த திட்டங்களில் ஆர்பிஐ மூலம் நாம் முதலீடு செய்யும் பட்சத்தில் அதற்கான வட்டியை அரசு நமக்கு வழங்கும். உதாரணமாக ரூ.100-க்கான கடன் பத்திரத்தை அரசு வெளியிடுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை நீங்கள் ரூ.97-க்கு வாங்க முடியும். இதன் மூலம் உங்களுக்கு ரூ.3 லாபம் கிடைக்கும். இப்படி தான் கடன் பத்திரங்கள் மூலம்  லாபம் பெற முடியும்.