Gold Price : இந்த நாடுகளில் தங்கம் விலை மிக குறைவு.. எந்த எந்த நாடுகள்?
Countries Selling Gold Price at Lowest | 2025 ஆம் ஆண்டு தங்கம் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக சாமானிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத பொருளாக தங்கம் மாறிவிட்டது. இந்த நிலையில், இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
2025 ஆம் ஆண்டு தங்கம் (Gold) உலக அளவில் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன தங்கத்தின் விலை (Gold Price) ரூ.1 லட்சத்தை நெருங்கி விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் இத்தகைய கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், சாமானிய மக்களால் தங்கம் வாங்குவதை நினைத்துக்கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் தங்கம் இத்தகைய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்தியாவை விட குறைவான விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படும் நாடுகள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவை விட தங்கம் குறைந்த விலையில் விற்கப்படும் நாடுகள்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இந்த சில நாடுகளில் இந்தியாவை விட குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
துபாய்
இந்தியாவில் தற்போது 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.1,30,910 ஆக உள்ளது. ஆனால் துபாயில் ரூ.1,14,740-க்கு கிடைக்கிறது. துபாயில் ஜிஎஸ்டி விலக்கு, குறைவான இறக்குமதி வரி, இந்தியாவை விட குறைவான உற்பத்தி செலவு ஆகியவை உள்ளதால் இந்தியாவை விட அங்கு தங்கம் குறைவான விலைக்கு கிடைக்கிறது.
இதையும் படிங்க : GSB : 338 சதவீதம் லாபம் தந்த தங்க பத்திரம்.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!
அமெரிக்கா
துபாயை போலவே அமெரிக்காவிலும் தங்கம் விலை குறைவாக உள்ளது. அதாவது அங்கு 10 கிராம் 24 காரட் தங்கம் ரூ.1,15,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது துபாயை விட வெறும் ரூ.300 மட்டுமே அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி கட்டணம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கம் விலை குறைவாக உள்ளது.
ஹாங்காங்
தங்கம் வாங்க சிறந்த இடமாக உள்ள இடங்களின் பட்டியலில் அடுத்ததாக ஹாங்காங் உள்ளது. அங்கு வாட் வரி விதிப்பதில்லை. இதன் காரணமாக அங்கு 10 கிராம் 24 காரட் தங்கம் வெறும் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆசியாவிலே மிக குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கு ஹாங்காங் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதையும் படிங்க : Silver Price : சரசரவென உயரும் வெள்ளி விலை.. முதலீடு செய்வது சிறந்ததா?
சிங்கப்பூர்
சிங்கப்பூரிலும் தங்கத்தின் விலை இந்தியாவை விட குறைவாகவே உள்ளது. அங்கு 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.1,18,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்கு ஜிஎஸ்டி விலக்கு, குறைந்த உற்பத்தி செலவு ஆகியவற்றின் காரணமாக இந்தியாவை விட அங்கு தங்கம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.