அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை உயருமா? என்ன நடக்கும்?

Akshaya Tritiya Gold Price Update: அமெரிக்கா - ஈரான் இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை உயருமா? என்ன நடக்கும்?

மாதிரி புகைப்படம்

Published: 

09 Apr 2026 21:42 PM

 IST

அட்சய திருதியை நெருங்கி வரும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு அக்ஷ்ய திருதியை தினத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்ற கேள்வி மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 15 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது சரியான நேரமா என்ற குழப்பம் பொதுமக்களிடம் உருவாகியுள்ளது.

அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை உயருமா?

கடந்த 2 நாட்களாக தங்க விலை குறைவாக இருந்த நிலையில்,  ஏப்ரல் 8,  2026 சர்வதேச சந்தையில் திடீரென தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது.  இது நகை வாங்க திட்டமிட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஏப்ரல் 9, 2026 அன்று,  ஏறிய அதே வேகத்தில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்க விலை உயர்வதற்கும், குறைவதற்கும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அமெரிக்க டாலரின் வலிமை, உலக வங்கிகள் தங்கம் வாங்கும் அளவு போன்றவை தங்கத்தின் விலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, அட்சய திருதியை, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இந்தியாவில் மக்களிடம் தங்க நகைகள் வாங்கும் பழக்கம் இருக்கிறது.

ஆனால், இந்த ஆண்டு அட்சய திருதியை நாளில் உலக அளவில் பொருளாதார சூழல் சற்று மாறுபட்டுள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், வட்டி விகிதம் குறித்து நிலவும் தெளிவின்மையும், தங்க விலை உயராமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

இதனால் அட்சய திருதியை காலத்தில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போதைய நிலையிலேயே தங்கத்தின் விலை இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக, உலக சந்தைகளில் நிலவும் பதற்றம் தற்காலிகமாக குறைந்துள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும்  உயர்ந்துள்ளது. ஆசிய அபங்கு சந்தைகள் 5 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளன. நிபுணர்களின் கருத்துப்படி அட்சய திருதியை நாளில் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயராது என்று கூறப்படுவதால் தங்கம் வாங்க சரியான தருணமாக கருதப்படுகிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?