20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தையை விட அதிக லாபம் தந்த தங்கம்!

Gold Gave High Returns In Past 20 Years | உலக அளவில் அதிகம் முதலீடு செய்யப்படும் மூன்று முக்கிய அம்சங்கள் என்றால் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் தங்கமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் தங்கம் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தையை விட அதிக லாபத்தை தந்துள்ளது.

20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தையை விட அதிக லாபம் தந்த தங்கம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Dec 2025 18:36 PM

 IST

2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமைந்ததுள்ளது. காரணம், 2025 தொடங்கியது முதலே தங்கம் மிக வேகமாக விலை உயர்வு அடைய தொடங்கியது. இந்த நிலையில், தற்போது அதிகபட்சமாக தங்கம் ஒரு சவரன் ரூ.98,960 ஆக உள்ளது. அதாவது விரைவில் ரூ.1 லட்சத்தை தண்டும் நிலைக்கு தங்கம் தள்ளப்பட்டுள்ளது. தங்கம் இத்தகைய கடுமையான விலை உயர்வை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் நிலையில், சாமானிய மக்களின் எட்டா கனியாக தங்கம் மாறிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் தங்கம், ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தை ஆகிய மூன்றையும் ஒப்பிட்டு பார்க்கையில் எது அதிகமான லாபத்தை தந்துள்ளது என்பது குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட்டை விட அதிக லாபம் தந்த தங்கம்

ஃபண்ட்ஸ் இந்தியா (Funds India) என்ற நிறுவனம் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச்சந்தையை விடவும் தங்கம் அதிகமான லாபத்தை கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஆண்டுக்கு சராசரியாக 13.5 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. இதேபோல ரூபாய் விதிகத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவீதம் என்ற சிஏஜிஆர் (Compound Annual Growth Rate) வளர்ச்சியை தங்கம் சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரியல் எஸ்டேட் ஆண்டுக்கு 7.6 சதவீதம் என்ற சிஏஜிஆர் என்ற வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்காவை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்த மெக்சிகோ.. இந்தியா மீது 50% வரி விதித்தது!

அதிக லாபம் தந்த முதலீடாக முதலிடத்தில் உள்ள தங்கம்

அமெரிக்க பங்குச்சந்தையான எஸ்&பி 500 இண்டெக்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 14.8 சதவீத சிஏஜிஆர் வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், அதனை விடவும் தங்கம் கூடுதல் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 23.2 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை 16.5 சதவீத வளர்ச்சியையும், அமெரிக்க பங்குச்சந்தை 19.6 சதவீத வளர்ச்சியையும் சந்தித்துள்ளது. இவ்வாறு சரவ்தேச அளவில் அனைத்து துறைகளையும் விடமும், தங்கமே சிறந்த பலன்களை கொடுத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்ததன் காரணமாக இது சாத்தியமாகியுள்ளதாகவும், இனி வரும் காலங்களிலும் தங்கம் தொடர்ந்து விலை உயரும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது
23 ஆண்டுகள் நீண்ட திருமணம்.. வெள்ளை பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த சம்பவம்..
செல்ஃபி எடுக்க முயன்று 130 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
அமெரிக்காவில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் - இந்திய வம்சாவளி இளைஞர் கைது