Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி.. நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!

Gold and Silver Price Reduced In Chennai | சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி.. நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Feb 2026 20:20 PM

 IST

சென்னை, பிப்ரவரி 06 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 06, 2026) தங்கம் மற்றும் வெள்ளி அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்தும், வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் உச்சத்தில் இருந்து சரிய தொடங்கிய தங்கம்

2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. இதன் காரணமாக ஜனவரி 29, 2026 அன்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.16,800-க்கும், ஒரு சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு கிராம் ரூ.20,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.1,60,000-த்தை தாண்டியும்  விற்பனை செய்யப்படும் சூழல் நிலவியது. இது சாமானிய மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தினமும் ரூ.100 சேமித்தால் போதும்.. அஞ்சலக ஆர்டி திட்டத்தில் முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்!

ரூ.1,15,000-க்கு கீழ் வந்த தங்கம்

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
28 ஜனவரி 2026 ரூ.15,610 ரூ.1,24,880
29 ஜனவரி 2026 ரூ.16,800 ரூ.1,34,400
30 ஜனவரி 2026 ரூ.15,850 ரூ.1,26,800
31 ஜனவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
01 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
02 பிப்ரவரி 2026 ரூ.13,950 ரூ.1,11,600
03 பிப்ரவரி 2026 ரூ.14,270 ரூ.1,14,160
04 பிப்ரவரி 2026 ரூ.14,900 ரூ.1,19,200
05 பிப்ரவரி 2026 ரூ.14,320 ரூ.1,14,560
06 பிப்ரவரி 2026 ரூ.14,120 ரூ.1,12,960

ஒரே நாளில் ரூ.1,600 குறைந்த தங்கம் ரூ.20,000 குறைந்த வெள்ளி

இன்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.14,120-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us
தனது மகளின் 26வது பிறந்த நாளை ஸ்பெஷலாக கொண்டாடிய திலீப்
இறைச்சிக்காக கடத்தப்பட்ட7 நாய்கள்.... ஒற்றுமையாக தப்பித்து வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..