ரூ.15,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட கவின்கேர் நிறுவனம் – பன்னாட்டு நிறுவனங்களை வென்ற தமிழர்!
The CavinKare Success Story : இந்திய சந்தைகளில் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிகளுக்கு நடுவே தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் கவின்கேர் நிறுவனர் ரங்கநாதன். கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ரூ.15,000 முதலீட்டில் துவங்கப்பட்டது. தற்போது ரூ.1100 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

கவின்கேர் ரங்கநாதன்
Fast Moving Consumer Goods எனப்படும் மக்கள் அதிகம் வாங்கும் பொருட்கள் என்ற பிரிவில் தனது முத்திரையைப் பதித்தவர் கவின்கேர் (Cavinkare) நிறுவனர் சி.கே.ரங்கநாதன். இந்திய வாடிக்கையாளர்களின் நிலையை மிகவும் சரியாக புரிந்த அவர் உப்பு (Salt) முதல் ஷாம்பூ வரை பாக்கெட்களில் விற்பனை செய்யும் முறையைக் கொண்டு வந்தார். உணவுப் பொருட்கள் விற்பனையிலும் முத்திரை பதித்தார். குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு இந்திய சந்தைகளில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். அவரது வெற்றி இரண்டு வரிகளில் சொல்லும் அளவுக்கு மிக எளிதானதாக இல்லை. வெறும் ரூ.15,000 முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் இன்று ரூ.1,100 கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடலூர் தமிழரின் வெற்றிக் கதை
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் வெறும் ரூ.15,000முதலீட்டில் கவின்கேர் நிறுவனத்தை துவங்கினார். அவரது நிறுவனம் மெல்ல வளரத் துவங்கியது. இந்த நிலையில் கடந்த 1993 ஆம் ஆண்டு அந்நிறுவனம் மிகப்பெரிய சவாலைச் சந்தித்தது. அந்த காலகட்டத்தில் மத்திய அரசு சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரி சலுகைகளை ரத்து செய்தார். இதன் காரணமாக பன்னாட்டு நிறுவனங்களுடன் நேரடியாக போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. அந்த நேரத்தில் தான் ரங்கநாதன் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தனது நிறுவனத்தின் ஐஐஎம் பட்டதாரிகளை நியமித்து நிறுவனத்தை முன்னேற்றம் முடிவை எடுத்தார். இந்த நிறுவனம் வளர்ச்சிக்கான திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படிக்க : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!
இதனையடுத்து கடந்த 1997 ஆம் ஆண்டு ரூ. 2 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்தது. ஆனால் அப்போது மேலும் ஒரு ரிஸ்க்கை ரங்கநாதன் கையிலெடுத்தார். அதாவது ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக ரூ.4 கோடியை முதலீடு செய்தார். அது ஆபத்தான முடிவாக கருதப்பட்டாலும், தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வழியை அது ஏற்படுத்திக்கொடுத்தது.
தவறான முடிவுகளால் ஏற்பட்ட இழப்புகள்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஒரு குளிர்பான நிறுவனத்தை ரூ.30 கோடிக்கு வாங்கினார். ஆரம்பத்தில் லாபம் கொடுத்ததாலும் ஒரு கட்டத்தில் அந்த பிராண்ட் மக்களிடையே தனித்துவத்தை இழந்தது. இதனால் பங்கு சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது. மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ரூ.25 கோடி முதலீடு செய்தார். அதுவும் அவருக்கு தோல்வியாக அமைந்தது. அது தன்னுடைய நிர்வாக திறனுக்கு ஏற்பட்ட தோல்வி என அவர் கருதினார்.
இதையும் படிக்க : EPFO: இனி இறந்த நபரின் குழந்தைகளுக்கு நேரடியாக பணம் கிடைக்கும் – விண்ணப்பிப்பது எப்படி?
வெற்றிக்கான காரணம்
தனது வெற்றிக்கான காரணமாக அவர் கூறுவது, நல்ல வேலை சூழல் மற்றும் தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். vநிறுவனத்தின் பலவீனங்கள், பலம், சந்தை வாய்ப்புகள், சவால்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து தீர்மானிக்க வேண்டும். இதனை அனைத்தையும் புரிந்துகொண்டு நமது நிறுவனத்துக்கான வியூகத்தை வகுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட பெரும் முதலீடுகள் தேவையில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் போதும் என்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தான் தனது முன்மாதிரி என்கிறார்.
இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிகள் மேலும் அதிகரிக்கும். புதிய விற்பனை முறைகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ககலாம். எனவே நிறுவனங்ள் தங்களது திட்டங்களை விரைவாக மாற்றிக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.