கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கணக்கு வரை.. நவம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்!
November 2025 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். இன்னும் சில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில், நவம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), பெட்ரோ மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்படும். 2025, அக்டோபர் மாதம் இன்னும் ஒருசில நாட்களில் நிறைவடைய உள்ளது. இன்னும் ஒருசில நாட்களில் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், நவம்பர் முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நவம்பர் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
நவம்பர் 1, 2025 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்குன் வர உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், நவம்பர் 1, 2025 அன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றும். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், நவம்பர் 1, 2025 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸ்களில் இத்தனை சிறப்புகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
வங்கி கணக்கு நாமினிகள்
தற்போதைய நிலவரப்படி ஒரு வங்கி கணக்கிற்கு ஒருவர் மட்டுமே நாமினியாக இருக்கும் நடைமுறை உள்ளது. இதன் காரணமாக கணக்கு வைத்திருக்கும் நபர் எதிர்பாராத சூழல்களில் பலியாகிவிட்டால், அவரது பணம் மற்றும் லாக்கரில் இருக்கும் பொருட்கள் உரிமை கோரப்படாமலே இருக்கும். இவ்வாறு கோடி கணக்கான பணம் வங்கிகளில் இருப்பில் உள்ளது. இந்த நிலையில், நவம்பர் 1, 2025 முதல் வங்கி கணக்கு மற்றும் லாக்கர்களுக்கு 4 நாமினிகள் வரை நியமிக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கடும் சரிவை சந்தித்த தங்கம்.. மேலும் விலை குறையுமா?.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?
ஆதாரில் வரும் முக்கிய மாற்றங்கள்
நவம்பர் 1, 2025 முதல் ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை எந்த வித ஆவணங்களும் இன்றி மாற்றம் செய்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) கூறியுள்ளது. விவரங்களை மாற்றம் செய்வதை எளிதாக்கும் வகையில் இந்த புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.