AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதிய அமைச்சர்களுக்கு என்ன இலாக்காக்கள்? துறை வாரியாக முழு விவரம்!

TVK Cabinet New Ministers Portfolios: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாக இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதிய அமைச்சர்களுக்கு என்ன இலாக்காக்கள்? துறை வாரியாக முழு விவரம்!
புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 21 May 2026 13:02 PM IST

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் கிண்டியில் அமைந்துள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் என சுமார் 23 பேர் புதிதாக அமைச்சராக பதவி ஏற்றனர். அவர்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிராமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் 23 பேருக்கு  இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இதில்,

  • ஸ்ரீநாத் – மீன்வளத்துறை.
  • கமலி – கால்நடைத்துறை.
  • சி. விஜயலட்சுமி – பால்வளத்துறை.
  • ரமேஷ் – இந்து சமய அறநிலைத்துறை.
  • ரஞ்சித் குமார் – வனத்துறை.
  • வினோத் – வேளாண்துறை
  • மரிய வில்சன் – நிதித்துறை.
  • ராஜேஷ் குமார் – சுற்றுலாத்துறை.
  • குமார் – தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை ( புதிய துறை உருவாக்கம்).
  • விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை.
  • விக்னேஷ் – மதுவிலக்கு கலால் மற்றும் கலால் பிரிவு துறை.
  • முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை.
  • மதன் ராஜா – சிறு, குரு, நடுத்தர தொழில் துறை.
  • காந்தி ராஜ் – கூட்டுறவுத்துறை.
  • ராஜ்குமார் – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை.
  • லோகேஷ் தமிழ்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை.
  • விஜய் பாலாஜி – காதி கதிர் ஜவுளித்துறை.
  • சம்பத் குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
  • சரத்குமார் – மனிதவள மேம்பாட்டுத் துறை.
  • விஸ்வநாதன் – உயர் கல்வித் துறை.
  • தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
  • ராஜ்குமார் – வீட்டு வசதி துறை
  • ஜெகதீஷ்வரி – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு

விடுதலை சிறுத்தைகள் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு அமைச்சர் பதவி

ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலன் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆகியவை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த துறைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிற. இதனிடையே, செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மரிய வில்சனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Follow Us