HDFC Mutual Fund : பெண்கள் நிதி சுதந்திரம் கிடைப்பதற்காக என்ன செய்ய வேண்டும் ?
Barni Se Azadi: எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பர்னே சே ஆசாத்தி என்ற திட்டத்தை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக Money9Live நடத்திய உரையாடலில் பெண்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் குறித்து எச்டிஎஃப்சியின் சிஇஓ நவ்நீத் முன்னோட் விளக்கம் அளித்தார்.

இந்தியா தற்போது 79வது சுதந்திர தினத்தை (Independence Day)கொண்டாடி வருகிறது. இருப்பினும் நாட்டின் பெண்கள் இன்னும் நிதி சுதந்திரம் இல்லாமல் இருக்கின்றனர். பாரம்பரிய சேமிப்பு முறைகளைத் தாண்டி முதலீடுகள் மூலம் தங்கள் கனவுகளை நிறைவேற்றும் எண்ணம் தற்போது பெண்கள் மத்தியில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் எச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் (HDFC Mutual Fund) நிறுவனம் பர்னி சே ஆசாதி (Barni Se Azadi) என்ற ஐந்தாவது பதிப்பை துவங்கியுள்ளது. பெண்களின் பாரம்பரிய சேமிப்பு சிந்தனைகளை உடைப்பது தான் இதன் நோக்கம். உண்மையான நிதி சுதந்திரம் என்பது பணத்தை சேமிப்பதன் மூலம் மட்டும் கிடைக்காது. அதனை சரியான திட்டங்களில் முதலீடு செய்வதும் மிகவும் முக்கியம். இது தொடர்பாக பேசிய எச்டிஎஃப்சி நிறுவனத்தின் சிஇஓ நவ்நீத் மனோட், இந்த பிரச்சாரம் இப்போது ஒரு சமூக இயக்கமாக மாறியுள்ளது, இது பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதை நோக்கி நகர்கிறது” என்றார்.
இது தொடர்பாக Money9Live ஒரு சிறப்பு உரையாடலை ஏற்பாடு செய்தது. அதில் மூன்று பெண்கள் பங்கேற்றனர். எச்டிஎஃப்சி நவ்நீத் முன்னோட்டுடன் தத்விக் ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரிம்ஜிம் சகியா, திஷா நிறுனர் திஷா கார்த்திக் மற்றும் 11:11 ஸ்லிம்மிங் வேர்ல்டின் நிறுவனர் பிரதிபா சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
உரையாடலின் தொடக்கத்தில், மாறிவரும் இந்தியாவைப் பற்றி நவ்நீத் முனோட் தனது கருத்துகளை எடுத்துரைத்தார். அவர் பேசியதாவது, ”கடந்த 30-35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவிற்கும் இன்றைய இந்தியாவிற்கும் இடையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று பெண்களின் பார்வையில் பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை, லட்சியம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றை நாம் காண்கிறோம். பெண்கள் எப்போதும் சேமிப்பில் நிபுணர்களாக இருந்துள்ளனர். முன்னதாக, மாதாந்திர செலவுகளிலிருந்து சேமிக்கப்படும் பணம் சமையலறைகளில் உள்ள ஜாடிகள், அலமாரி அல்லது சோபாவின் கீழ் கூட மறைத்து வைக்கப்பட்டது, இதனால் தேவைப்படும்போது குடும்பத்திற்குப் பயன்படுத்த முடியும். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, அதே பெண்கள் இந்த சேமிப்புகளை முதலீடு செய்வதன் மூலம் பணத்தையும் அதிகரிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிக்க : நிலையான வைப்பு நிதி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
அவரைத் தொடர்ந்து தத்விக் ஆயுர்வேத மற்றும் ஆரோக்கிய லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ரிம்ஜிம் சைகியா பேசியதாவது, ”நீண்ட காலமாக கார்ப்பரேட் துறையில் ஒரு வசதியான வேலையைச் செய்து வருகிறேன். ஆனால் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் வேலையை செய்ய வேண்டும் என உணர்ந்தேன் . இந்த எண்ணம் காரணமாக, அவர் தத்விக் ஆயுர்வேத நிறுவனத்தை தொடங்கினேன். அதன் கீழ் அவர் 22 வகையான தயாரிப்புகளை உருவாக்கினேன். இதில் சிறப்பு என்னவென்றால், எனது தொழிற்சாலையில் 90% ஊழியர்கள் பெண்கள் தான் என்றார்.
திஷா ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் தலைவர் திஷா கார்க்கின் கதையும் ஊக்கமளிக்கிறது. அவர் பேசியதாவது, நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பிறகு, பொறுப்புகள் காரணமாக என்னால், தொழில்முனைவோராக எனது வாழ்க்கையைத் தொடங்க முடியவில்லை. திருமணமாகி 10 ஆண்டுகள் இல்லத்தரசிரயாக இந்த நான், பல போராட்டங்களுக்கு பிறகு, தனது சொந்த பொட்டிக் மையத்தைத் திறந்து தனது கனவுகளுக்கு செயல்கொடுத்தேன் என்றார்.
இதையும் படிக்க: முதலீடு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
11:11 ஸ்லிம்மிங் வேர்ல்டின் நிறுவனர் பிரதிபா சர்மா, தனது சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதில் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அவர் கூறுகிறார். சேமிக்கும் பழக்கத்தை தன்னிடம் வளர்ப்பதில் தனது தாயின் பங்கு எவ்வாறு முக்கியமானது என்பதை அவர் விளக்கினார்.
இந்தக் கதைகளைக் கேட்டதும், நவ்நீத் முனோட், “இதுதான் வளர்ந்து வரும் இந்தியாவின் அடையாளம். காலப்போக்கில், பெண்களும் நிதி விஷயங்களில் ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்தால், வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.
முதலீடு மூலம் நிதி சுதந்திரம் பெறலாம்
உரையாடலின் போது ரிம்ஜிம் சகியா, பொருளாதார ரீதியாக முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு ஒரு சரியான எதிர்காலத்தை எவ்வாறு உறுதி செய்கிறார் என்று கேட்டபோது, சரியான திசையில் விழிப்புணர்வும் வழிகாட்டுதலும் மிக முக்கியம் என்று முனோட் கூறினார். மேலும் பேசிய அவர், இதுதான் எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம். பெண்களின் சேமிப்பை சரியான திசையில் முதலீடு செய்வதே எங்கள் வேலை. இன்று, யாராவது சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், அது காலப்போக்கில் வளரும். இதற்காக, சிப் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையுடன் தொடங்கலாம், ஆனால் இதற்காக ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்றார்.
பெண்கள் பொருளாதார ரீதியான முடிவுகளில் அதிக விழிப்புணர்வு மற்றும் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும் என்று முனோட் நம்புகிறார். அவரைப் பொறுத்தவரை, ” அதிக பணம் சம்பாதிப்பதற்கான சரியான முதலீடு, பொறுமை ஆகியவை அவசியம். பெண்களுக்கு பொறுமை மற்றும் நீண்ட கால சிந்தனை திறன் உள்ளது, இதில் முதலீடு குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தால், சிறப்பான பலம் கிடைக்கும்” இந்த மாற்றம் நகரங்களுக்கு மட்டுமல்ல, கிராமங்களில் உள்ள பெண்களும் இப்போது முதலீட்டை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். என்றார்.
எவ்வளவு பணம் சம்பாதிக்கிறது என்பது முக்கியம்
உரையாடலின் முடிவில், முனோட் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை வழங்கினார், “இன்றைய பெண்களுக்கு எந்தப் பாதையும் கடினமாக இல்லை. ஊடகங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். உங்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும், உங்கள் பணம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறது என்பதே மிக முக்கியம். அதனால்தான், சேமிப்பது மட்டும் போதாது, ஆனால் ஒரு நல்ல முதலீட்டாளராக இருப்பதும் முக்கியம்.”