Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போன் எண்ணை சரிபார்க்கும் யுபிஐ மற்றும் வங்கிகள் – காரணம் என்ன தெரியுமா?

SIM Verification Rules: வங்கிகள் மற்றும் யுபிஐ ஆகியவை பயனர்களின் போன் எண்ணை சரிபார்க்க நாடாளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. மோசடிகளைத் தவிர்க்கவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. மேலும் புதிதாக சிம் வாங்கும் பயனர்களின் முக அடையாளமும் ஏஐ மூலம் சோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

போன் எண்ணை சரிபார்க்கும் யுபிஐ மற்றும் வங்கிகள் – காரணம் என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Sep 2025 18:36 PM IST

இந்தியாவில் வங்கிகள் மற்றும் யுபிஐ (UPI) செயலிகள் விரைவில் பயனர்களின் மொபைல் எண்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மூலம் நேரடியாக சரிபார்க்கும் வசதி பெறவுள்ளன. மோசடிகளைத் தடுக்கவும் போலி கணக்குகளை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும்  என தொலைத்தொடர்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் இது பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தியாவில் யுபிஐ செயலிகளை தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் அதன் மூலம் மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன, இதனை தடுக்கவே அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏஐ  மூலம் முக அடையாளம் காணும் சோதனை

நாடாளுமன்ற குழு (Parliamentary Standing Committee On Home Affairs) இந்த திட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. வங்கிகள், மற்றும் யுபிஐ மொபைல் எண்ணை சரிபார்ப்பதுடன் கூடுதலாக ஏஐ அடிப்படையில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தையும் சிம் கார்டு வழங்கும்போது பயன்படுத்த வேண்டும் என அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது போலியான அடையாள ஆவணங்களை வைத்து சிம் கார்டு வாங்குவதை தடுப்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!

மற்றொரு பக்கம் இந்த முறை நடைமுறைக்கு வந்தால் பயனர்களின் தனியுரிமை பாதிக்கப்படக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இந்த விதிகள் எல்லையற்ற அதிகாரத்தை வழங்குவதால் பயனாளர்களின் தரவு தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது.  ஆனால் அதே நேரம் நாடாளுமன்ற குழு இந்த திட்டம் தனியுரிமையை பாதுகாக்கும் அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

பயனர்களுக்கு பாதிப்பா?

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சாதாரண பயனர்களுக்கு பாதிக்கப்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக, பலர் தங்கள் வங்கி கணக்கில் தங்கள்  தந்தை, சகோதரர் மற்றும் குடும்ப உறுப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதானால் அவர்களும் இந்த திட்டத்தினால் பாதிக்கப்படக்கூடும்.

இதையும் படிக்க : பிஎஃப் பணத்தை எடுப்பதில் ஊழியர்கள் சிக்கல்களை சந்திப்பது ஏன்?.. இவை தான் முக்கிய காரணங்கள்!

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படால் மட்டுமே நடைமுறையில் எப்படி செயல்படும், இதனால் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். தற்போது மோசடிகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரவிருப்பதாக நாடாளுமன்ற குழு விளக்கமளித்துள்ளது. ஆனால் பயனர்களின் தனியுரிமை பாதிக்கப்படாமல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.