ஆகஸ்ட் 11 முதல் 17 வரை.. இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!
4 Days Holidays for Banks | இந்தியாவில் சுதந்திர தின விழா உள்ளிட்டவை காரணமாக ஆகஸ்ட் 11, 2025 முதல் ஆகஸ்ட் 17, 2025 வரை மொத்தம் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெறும் 3 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் எனவு கூறப்பட்டுள்ளது.

பண்டிகைகள், அரசு விடுமுறைகளின் போது வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 11, 2025) முதல் ஆகஸ்ட் 17, 2025 வரை இந்தியா அளவில் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா (Independence Day) உள்ளிட்டவை காரணமாக இந்த 7 நாட்களில் வெறும் 3 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 7 நாட்களில் எந்த எந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
79வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்தியா
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று இந்தியா தனது 79வது சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறது. சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை வருவதால் அந்த வார விடுமுறை நீண்டதாக உள்ளது. அதுமட்டுமன்றி வேறு சில பண்டிகைகள் காரணமாக மொத்தமாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : UAN எண் இல்லாமலே பிஎஃப் பணம் எடுக்கலாம்.. அட இது தெரியாம போச்சே!




எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
- ஆகஸ்ட் 13, 2025 – தேச பக்தர்கள் தினம் என்பதால் மனிப்பூர் மாநிலத்தில் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை.
- ஆகஸ்ட் 15, 2025 – சுதந்திர தின விழா என்பதால் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை.
- ஆகஸ்ட் 16, 2025 – ஜென்ம அஷ்டமி என்பதால் தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஆகஸ்ட் 17, 2025 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி இறந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணம் பெறலாம் – ரிசர்வ் வங்கியின் புதிய நடைமுறை!
வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?
பொதுவாக இத்தைய வங்கி விடுமுறை நாட்களின் போது, பொதுமக்கள் வங்கிகளின் இதற சேவைகளை பயன்படுத்தலாம். அதாவது ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங், யுபிஐ உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தி செய்துக்கொள்ளலாம். ஒருவேளை வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் அதற்கு ஏற்ப திட்டத்தை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.