அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் பின்னடைவு – சுங்க கட்டணங்களுக்கு நீதிமன்றம் தடை
Trump Tariff Setback : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த உலகளாவிய வர்த்தக சுங்க வரிகள் (Global Tariffs) தொடர்பான உத்தரவை, அமெரிக்க உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த சர்வதேச வர்த்தக சுங்க கட்டணங்கள் (Global Tariffs) தொடர்பான உத்தரவை, அமெரிக்க உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது டிரம்ப் அரசுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் 6க்கு 3 என்ற வாக்கு வித்தியாசத்தில் இந்த தீர்ப்பை வழங்கியுல்ளது. கடந்த 1977 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச அவச பொருளாதார அதிகார சட்டம் (IEEPA) என்ற சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்திருந்த சுங்க கட்டணங்கள் சட்டபூர்வமானது அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த சட்டம் தேசிய அவசர காலகட்டங்களில் பயன்படுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும், அதனை சுங்க கட்டணங்களை விதிக்க பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சுங்க கட்டணங்கள் தொடர்பான டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
அமெரிக்க அரசியலமைப்பு சட்டங்களின் படி வரி மற்றும் சுங்க கட்டணங்களை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. காங்கிரஸிற்கு மட்டும் தான் உள்ளது. மக்களின் பொருளாதார திட்டங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரஸிற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் மூலம் சுங்க கட்டணம் விதிக்கும் அதிகாரம் காங்கிரஸ் வெளிப்படையாக வழங்கியிருந்தால் மட்டுமே அது செல்லுபடியாகும். இங்கு அப்படியான அதிகாரம் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : அணுசக்தி விவகாரத்தில் சமரசத்திற்கு தயார்.. ஆனால்.. அமெரிக்காவுக்கு நிபந்தனை வைத்த ஈரான்!
இந்த தீர்ப்பிற்கு நீதிமன்றத்தின் 3 லிபரல் நீதிபதிகளும், 3 கன்சர்வேட்டிவ் நீதிபதிகளும் இணைந்தது இதற்கு ஆதரவாக இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் நீதிபதிகள் பிரெட் கவனாக், கிளாரன்ஸ் தாமஸ், சாமுவேல் அலிடோ ஆகியோர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க பரஸ்பர சுங் கட்டணம் என பல நாடுகளுக்கு அதிக சுங்க கட்டணங்களை விதித்தார். இது தேசிய அவசர நிலை என அறிவித்து சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் அமல்படுத்தப்பட்டது. இது வரிகள் அமெரிக்க பொருளாதார பாதுகாப்பிற்கு தேவையானவை என்றும் இல்லையெனில் அமெரிக்க பாதிக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
இதையும் படிக்க : ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறைக்கு தட்டுப்பாடு.. மூன்று நாட்களில் 10,000 ஆணுறைகள் தீர்ந்தது!
இந்த புதிய சட்டத்தின் படி சுங்க வரிகளின் மூலம் அமெரிக்காவின் பொருதாளார அமைப்பு கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் 133 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் இந்த வரிகள் பொருளாதார தாக்கம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 3 டிரில்லியன் டாலர் வரை இருக்கும் என அமெரிக்க காங்கிரஸ் அலுவலகம் கணித்தது.