தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட 3 வெண்கல சிற்பங்கள் – திரும்பி ஒப்படைக்கும் அமெரிக்கா – எந்த கோவிலை சார்ந்தது?
Cultural Heritage Returned : தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக திருடப்பட்ட 3 பழமையான வெண்கலச் சிற்பங்களை இந்தியாவுக்கு மீண்டும் ஒப்படைக்க அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் 3 வெண்கல சிலைகளை திருப்பி அளிக்கும் அமெரிக்கா
தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக திருடப்பட்ட 3 பழமையான வெண்கலச் சிற்பங்களை இந்தியாவுக்கு மீண்டும் ஒப்படைக்க அமெரிக்காவைச் (America) சேர்ந்த ஸ்மித்சோனியன் தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவால் திரும்பி அனுப்பப்படவுள்ள சிற்பங்கள் அனைத்தும் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிற்பக் கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருந்துள்ளது. மேலும், அவை கோயில் திருவிழாக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கடவுள் சிற்பங்களாகவும் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
3 வெண்கல சிற்பங்களை திருப்பி அளிக்கும் அமெரிக்கா
இந்தியாவுக்கு மீண்டும் வழங்கப்பட உள்ள 3 சிற்பங்களில் சோழர் காலத்தைச் சேர்ந்த கிபி 900 ஆண்டுகளுக்கு முந்தைய நடராஜர் சிலை , சோழர் காலத்தைைய 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தை சேர்ந்த பரவை நாச்சியாருடன் சுந்தரர் சிலைஆகியவை அடங்கும். இந்தச் சிற்பங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.. 13,000 விமானங்கள் ரத்து.. பொதுமக்கள் பாதிப்பு!
தென் ஆசியக் கலைச் சேகரிப்புகளை முறையாக ஆய்வு செய்யும் பணியின் ஒரு பகுதியாக, தேசிய ஆசியக் கலை அருங்காட்சியகம் தனது சேகரிப்பில் உள்ள பொருட்களின் வரலாற்றை ஆய்வு செய்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்தின் புகைப்பட நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இந்த வெண்கலச் சிற்பங்கள் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் கடந்த 1959 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கோயில்களில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சட்டத்துக்கு புறம்பாக இந்தச் சிற்பங்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது உறுதியாகப் பதிவு செய்யப்பட்டது.
3 வெண்கல சிற்பங்களும் எந்த கோவிலுக்கு சொந்தமானது?
இந்த 3 சிற்பங்களில் நடராஜர் சிற்பம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ஸ்ரீ பவ ஔஷதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும், 1957ஆம் ஆண்டு இந்த சிற்பம் அந்த கோவிலில் இருந்ததை உறுதிப்படுத்தும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தச் சிற்பம் போலியான ஆவணங்கள் மூலம் நியூயார்க்கில் உள்ள ஒரு கலை அருங்காட்சியகத்திற்கு கொண்டுவரப்பட்டதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், சோமாஸ்கந்தர் மற்றும் பரவை நாச்சியாருடன் உள்ள சுந்தரர் சிற்பங்கள் முறையே மன்னார்குடி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கோயில்களில் இருந்ததாக புகைப்பட ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆகஸ்ட் 12-இல் புவி ஈர்ப்பு விசை இழப்பு…மக்கள் கொத்து கொத்தாக பலியாக வாய்ப்பு?நாசா கூறுவெதென்ன!
இந்த மூன்று வெண்கலச் சிற்பங்களின் மீண்டும் ஒப்படைப்பதன் மூலம், இந்தியாவின் சமய பாரம்பரியத்தை பாதுகாப்பதில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் உள்ள திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பாரம்பரியப் பொருட்களை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இது ஒரு முக்கிய முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.