துபாயில் திறக்கப்பட்ட தங்க வளாகம்.. ஒரே இடத்தில் 1,000 கடைகள்!
Gold District Opened In Dubai | தங்கம் வாங்க சிறந்த நாடாக துபாய் உள்ளது. காரணம், உலக அளவில் துபாயில் குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கிறது. இந்த நிலையில், சுமார் 1,000 தங்க நகை கடைகளை உள்ளடக்கிய தங்க வளாகம் ஒன்று துபாயில் திறக்கப்பட்டுள்ளது.
துபாய், ஜனவரி 28 : உலக அளவில் தங்கத்திற்கு (Gold) புகழ் பெற்ற இடமாக துபாய் (Dubai) உள்ளது. உலக அளவில் துபாயில் தங்கம் சற்று குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பலரும் துபாய்க்கு சென்று தங்கம் வாங்கி வருகின்றனர். இவ்வாறு துபாயில் தங்க நுகர்வு அதிகமாக உள்ள சூழலில், அங்கு ஒரு அசத்தலான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, “கோல்டு டிஸ்டிரிக்ட்” (Gold District) என்ற பெயரில் தங்க வளாகம் திறக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
துபாயில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட தங்க வளாகம்
துபாயின் தேரா பகுதியில் கோல்டு டிஸ்டிரிக்ட் என்ற பெயரில் தங்க வளாகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை வர்த்தக நிறுவனங்கள் மூலமாக துபாபை நகை வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த தங்க வளாகத்தில் சில்லறை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவைகளை உள்ளடிக்கிய நிறுவனங்கள் செயல்பட உள்ளன.
இதையும் படிங்க : அமெரிக்காவில் வீசிய பெரும் புயல்…12000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!
ஒரே இடத்தில் 1,000 நகை கடைகள்
Ithra Dubai officially launches Dubai Gold District, a purpose-built destination designed to strengthen Dubai’s position as the world’s leading hub for the gold and jewellery trade. Developed as a unified ecosystem, the District features more than 1,000 retailers and brings… pic.twitter.com/sY1ekO65PO
— Dubai Media Office (@DXBMediaOffice) January 27, 2026
துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்த தங்க வளாகத்தில் ஒரே இடத்தில் சுமார் 1,000 தங்க நகை கடைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவில் உள்ள சில முன்னணி தங்க நகை நிறுவனங்கள் இந்த வளாகத்தில் தங்களது கிளைகளை அமைக்க உள்ளன. தங்க நகை கடைகள் மட்டுமன்றி, அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் கடைகளும் இந்த வளாகத்தில் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : 4 ஆண்டுகளாக நீடிக்கும் போர்.. அபு தாபியில் நடக்கும் அமெரிக்கா-ரஷ்யா-உக்ரைன் மும்முனை பேச்சுவார்த்தை
இந்த வளாகத்தின் சிறப்பு அம்சமாக உலகிலேயே முதலாவது தங்க தெரு ஒன்று இங்கு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.