இலங்கையில் உலகையே ஆச்சரியப்படுத்தும் வகையில், உலகின் மிகப்பெரிய அபூர்வமான ரத்தினக் கல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3,563 கேரட் எடையுடைய இந்த அபூர்வ ரத்தினக் கல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஸ்டார் ஆஃப் பியூர் லேண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த வட்ட வடிவ ரத்தினக் கல், இதுவரை கிடைத்த இயற்கையான ரத்தினக்கல்லை விட மிகப்பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தினக் கல்லை ஆய்வு செய்த நிபுணர் ஆஷன் அமரசிங்கே, இந்த ரத்தினக்கல் ஆறு கதிர்கள் கொண்ட தெளிவான நட்சத்திர ஒளி கதிர் படலத்தைக் காட்டுவதாக கூறினார்.