புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் ரத்து செய்வது இனி பயணிகளுக்கு சவாலானதாக மாறும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.புதிய விதிமுறைகளின்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் வாங்கிய பிறகு, எந்த நேரத்தில் ரத்து செய்தாலும் 25 சதவீத கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதேபோல், ரயில் புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பிருந்து 8 மணி நேரம் வரை டிக்கெட் ரத்து செய்தால், 50 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும்.