சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

Trump-Xi Jinping Meeting in South Korea | தென் கொரியாவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ளார். அதற்காக இன்று (அட்கோபர் 30, 2025) தென் கொரியா செல்லும் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்.. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!

கோப்பு புகைப்படம்

Updated On: 

30 Oct 2025 08:18 AM

 IST

சீயோல், அக்டோபர் 30 : தென் கொரியாவின் (South Korea) உச்சி மாநாட்டில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கை (China President Xi Jinping) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) இன்று (அக்டோபர் 30, 2025) சந்தித்து பேச உள்ளார். சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வர்த்தக போர், வரிவிதிப்பு விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் டிரம்ப், சீன அதிபரை சந்திக்க உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் சந்திப்பின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜூ நகரில் ஏபிஇசி (ABEC – Asian Business Exhibitions and Conferences) அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31, 2025 மற்றும் நவம்பர் 1, 2025 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது. நாளை (அக்டோபர் 31, 2025) தொடங்க உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்னதாக இன்று (அக்டோபர் 30, 2025) தென் கொரியா செல்லும் டிரம்ப், அங்கு வைத்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். இது உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக உள்ளது.

இதையும் படிங்க : நெப்போளியன் வைர நகைகள் கொள்ளை விவகாரம்.. இரண்டு பேர் அதிரடி கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

6 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முக்கிய சந்திப்பு

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த சந்திப்பின் போது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகான டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு உலக அளவில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.