20 முதல் 50 சதவீதம் வரை வரி.. 22 நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Trump Imposes Tariffs on 22 Countries | அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 22 நாடுகளுக்கு வரி விதித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நாடுகளுக்கு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அவர் வரி விதித்துள்ளார். இந்த நிலையில், 22 நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.

20 முதல் 50 சதவீதம் வரை வரி.. 22 நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப்

Updated On: 

10 Jul 2025 11:27 AM

அமெரிக்கா, ஜுலை 10 : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) 21 நாடுகளுக்கு வரி (Tariff) குறித்த கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த நாடுகளுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை வரி விதிப்பது தொடர்பாக அவர் இந்த கடிதங்களை அனுப்பியுள்ளார். ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தலைகீழ் வரி விதிக்க போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது டிரம்பின் இந்த நடவடிக்கை உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 22 நாடுகளுக்கு டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் என்ன இருந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டிரம்ப்

2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிவர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றார். அவர் தான் பதவி ஏற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்க உள்ளதாக அறிவித்தார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிக்கும் நிலையில், அதே முறையை தானும் கடைபிடிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க :அமெரிக்காவை எதிர்த்தால் 10 சதவீதம் கூடுதல் வரி’ பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

22 நாடுகளுக்கு வரி குறித்து கடிதம் எழுதிய டொனால்ட் டிரம்ப்

உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதை டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதன் கால அவகாசம் நேற்றுடன் (ஜூலை 09, 2025) முடிவடைந்தது. இந்த நிலையில்,  22 உலக நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ள டிரம்ப், அவற்றுக்கு 20 முதல் 50 சதவீதம் வரை வரி விதிப்பதாக கூறியுள்ளார்.

20 முதல் 50 சதவீதம் வரி – 22 நாடுகளின் பட்டியல்

  1. ஸ்ரீலங்கா – 30 சதவீதம்
  2. லிபியா – 30 சதவீதம்
  3. ஈராக் – 30 சதவீதம்
  4. அல்ஜீரியா – 30 சதவீதம்
  5. பிலிப்பைன்ஸ் – 30 சதவீதம்
  6. புருனே – 25 சதவீதம்
  7. மோல்டோவா – 25 சதவீதம்
  8. மியான்மர் – 25 சதவீதம்
  9. லாவோஸ் – 40 சதவீதம்
  10. கம்போடியா – 36 சதவீதம்
  11. தாய்லாந்து – 36 சதவீதம்
  12. பங்களாதேஷ் – 35 சதவீதம்
  13. செர்பியா – 35 சதவீதம்
  14. இந்தோனேசியா – 32 சதவீதம்
  15. போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா – 30 சதவீதம்
  16. தென் ஆப்ரிக்கா – 30 சதவீதம்
  17. ஜப்பான் – 25 சதவீதம்
  18. கஜகஸ்தான் – 25 சதவீதம்
  19. மலேசியா – 25 சதவீதம்
  20. தென் கொரியா – 25 சதவீதம்
  21. துனிசியா – 25 சதவீதம்
  22. பிரேசில் – 50 சதவீதம்

மேலே குறிப்பிட்டுள்ள 22 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.