விரைவில் உக்ரைனுக்கு அமைதி திரும்பும்.. உக்ரைன் அதிபர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் உறுதி!

Donald Trump Zelenskyy Meet | உக்ரைன் - ரஷ்யா இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று (ஆகஸ்ட் 18, 2025) சந்தித்து பேசியுள்ளார்.

விரைவில் உக்ரைனுக்கு அமைதி திரும்பும்.. உக்ரைன் அதிபர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் டிரம்ப் உறுதி!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On: 

19 Aug 2025 08:04 AM

வாஷிங்டன், ஆகஸ்ட் 19 : ரஷ்யா – உக்ரை (Ukraine – Russia) இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அதி தீவிரமான போர் நீடித்து வரும் நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக ஆகஸ்ட் 15, 2025 அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசிய டிரம்ப், நேற்று (ஆகஸ்ட் 18, 2025) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப்

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 2025-ல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிந்தது. இந்த நிலையில், இந்த முறையும் அப்படிப்பட்ட சிக்கல்கள் எதுவும் ஏற்பட கூடாது என்பதற்காக ஜெலன்ஸ்கியுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க : என்னது! டிரம்ப்பை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் இல்லையா? அவரைப் போன்ற வேறு நபரா?

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பு

திட்டமிட்டபடியே நேற்று (ஆகஸ்ட் 18, 2025) வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர புதினும் விரும்புகிறார். இதுவரை 6 போர்களை நிறுத்தி உள்ளேன். விரைவில் உக்கரனுக்கு அமைதி திரும்பும். உலக நாடுகள் இந்த போரால் தளர்ந்து போய்விட்டன. இந்தப் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என நம்புகிறேன். இது தொடர்பாக ரஷ்யா – உக்ரைனுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!

போரில் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர், உக்ரைன் மக்களை நேசிக்கிறோம். இரண்டாம் உலகப் போருக்கு பின் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை. இது போன்ற ஒரு போர் இனி நடக்க கூடாது. புதினுடன் பேசினேன். இந்த சந்திப்புக்கு பிறகும் புதினுடன் பேச உள்ளேன். புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன். பேச்சுவார்த்தை நடத்துவது கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.