Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இங்கிலாந்து பயணம் நிறைவு.. மாலத்தீவு புறப்பட்ட பிரதமர் மோடி… பிளான் என்ன?

PM Modi Maldives Visit : இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மாலத்தீவுக்கு புறப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை மற்றும் மன்னர் சார்லஸை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இந்த பயணத்தில் இங்கிலாந்து இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இங்கிலாந்து பயணம் நிறைவு.. மாலத்தீவு புறப்பட்ட பிரதமர் மோடி… பிளான் என்ன?
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Jul 2025 12:25 PM

டெல்லி, ஜூலை 25 :  இங்கிலாந்து பயணத்தை  நிறைவு செய்த பிரதமர் மோடி, 2025  ஜூலை 25ஆம் தேதியான இன்று மாலத்தீவு (PM Modi Maldives Visit) புறப்பட்டு உள்ளார். மாலத்தீவு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.  அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி, 2025 ஜூலை 23ஆம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொர்ந்து, பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கெயர் ஸ்டார்மரை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இந்தியா இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், 2030ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தக்ம் இரட்டிப்பாகும்.  தொடர்ந்து, தொர்ந்து, பிரிட்டன் மன்னர் சார்லஸை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு பிரச்சினைகள் மற்றும் இந்தியா-இங்கிலாந்து உறவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தனர். பிரதமர் மோடி மன்னர் சார்லஸ்க்கு மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார்.

இதனை அடுத்து, பிரதமர் மோடி தனது  இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “இந்தப் பயணத்தின் பலன்கள் நமது வருங்கால சந்ததியினருக்கு பயனளிக்கும். இது இருநாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடிக்கும் கெய்ர் ஸ்டார்மருக்கும் இடையே இங்கிலாந்து-இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது” என கூறினார். பிரதமர் மோடி ஸ்டார்மரை இந்தியாவுக்கு வருமாறு அழைத்தார். அதனை அவரும் ஏற்றுக் கொண்டார்.

Also Read : இங்கிலாந்து சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. உற்சாக வரவேற்பு!

இங்கிலாந்து பயணம் நிறைவு

மாலத்தீவு புறப்பட்ட பிரதமர் மோடி

இதனை அடுத்து, பிரதமர் மோடி மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். இந்தியா-மாலத்தீவு உறவுகளின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் அவர் அந்நாட்டிற்கு வருகை தருகிறார்.

Also Read : 4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு செல்லும் பிரதமர் மோடி.. கையெழுத்தாகும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..

இது பிரதமர் மோடியின் மூன்றாவது மாலத்தீவு பயணமாகும். அதே நேரத்தில், ஜனாதிபதி முகமது முய்சு பதவியேற்ற பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் மாலத்தீவுக்கு செல்லும் முதல் பயணமாகும். ஜனாதிபதி முய்சுவின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் நடைபெறுகிறது. மேலும் இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.