நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான்.. ஹங்கேரியில் நூதன கொண்டாட்டம்!
Swim Suit Santa Claus Marathon In Hungary | கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஐரோப்பாவில் உள்ள ஹங்கேரியில் பொதுமக்கள் சிலர் நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓடியுள்ளனர்.

நீச்சல் உடையில் மாரத்தான் ஓட்டம்
புடாபெஸ்ட், டிசம்பர் 16 : உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். வீடுகள், கடை வீதிகள் என அனைத்து இடங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. கிறிஸ்து பிறப்பு வருகையை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகவும், கிறிஸ்தவர்களின் மிக முக்கிய பண்டிகையாகவும் உள்ள கிறிஸ்துமஸை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஹங்கேரியில் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நூதன முறையில் மாரத்தான் ஓட்டம்
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்டி வருகின்றன. அந்த வகையில், அங்கு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தலைநகர் புடொபெஸ்டில் நூதன முறையில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. அதாவது, அந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் அனைவரும் நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமணிந்து பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க : குறையும் குழந்தை பிறப்பு விகிதம்.. ஆணுறைகளுக்கு அதிக வரி.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சீன அரசு!
நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்
Dozens of people dressed in red swimsuits and Santa hats braved freezing temperatures in Budapest for the annual Half-Naked Santa Run pic.twitter.com/nyGgYbpZdC
— Reuters (@Reuters) December 15, 2025
உலக அளவில் பல்வேறு பகுதியில் மிகவும் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடும் குளிரில் அந்த பகுதி மக்கள் இத்தகைய உடை அணிந்து உற்சாகமாக மாரத்தான் ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க : பார்சிலோனாவில் இருந்து ஜெய்ப்பூர் வரை.. 2025ல் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்ட 10 இடங்கள்
கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி உற்சாகம்
அந்த மாரத்தானில் பங்கேற்றவர்கள் நீச்சல் உடையில் இருந்த நிலையில், குளிரை தாங்க முடியாததால் அவர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியும் அவர்கள் உற்சாகமாக இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.