ஈரான் போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

Donald Trump On Oil Price | ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எண்ணெய் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், ஈரான் போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On: 

04 Mar 2026 06:41 AM

 IST

வாஷிங்டன் டிசி, மார்ச் 04 : ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) இணைந்து தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் மீதான போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஈரான் போர் பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், டிரம்பின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், எண்ணெய் விலை குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேல்

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக வெடித்த மோதல் காரணமாக பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாடுகளும் இணைந்து ஈரானுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், தாக்குதல்களில் சிக்கி ஈரானின் உட்சபட தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என ஏராளமாவர்கள் பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க : அயதுல்லா அலி கமேனியின் மனைவி பலி.. உறுதி செய்த ஈரான் ஊடகங்கள்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான்

இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், ஈரானும் இரு நாடுகளுக்கும் எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், சர்வதேச எண்ணெய் கப்பல் போக்குவரத்து நீர் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. குறிப்பாக நீரிணையை கடக்கும் எந்த ஒரு கப்பலையும் தாக்குவோம் என்று ஈரான் கூறியிருந்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் ஆபத்து நிலவியது.

இதையும் படிங்க : பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்.. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவிப்பு

இந்த நிலையில், ஈரான் போருக்கு பிறகு எண்ணெய் விலை குறையும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், கொஞ்ச காலத்திற்கு எண்ணெய் விலை சற்று அதிகமாக இருக்கும். ஈரானுக்கு எதிரான போருக்கு பின் எண்ணெய் விலை குறையும். முன்பை விட குறையும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ