Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Donald Trump : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.. டொனால்ட் டிரம்ப் பேச்சு!

Donald Trump on Iran | ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Donald Trump : ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.. டொனால்ட் டிரம்ப் பேச்சு!
டொனால்ட் டிரம்ப்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 19 Jun 2025 07:28 AM

அமெரிக்கா, ஜூன் 19 : ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானை கண்டித்து வருகிறது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளது போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் – இஸ்ரேல் இடையே நிலவு கடும் மோதல்

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்களை (Nuclear Weapon) தயாரிப்பதாக கூறி, ஜூன் 13 2025 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதாவது ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 (Operation True Promise 3) என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலை வருகிறது.

அலி காமெனியை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நிலவும் இந்த போரில் அமெரிக்கா தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் தலைவர் அலி காமெனி சரணடை வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் சரணடைய வேண்டும் என்று அவரது எச்சரிக்கையை காமெனி நிராகரித்தார். மேலும் ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிட்டால் அந்நாட்டுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை – டிரம்ப்

ஈரான் தலைவர் அமெரிக்காவை தாக்குவதாக எச்சரித்து, சரணடைய மறுப்பு தெரிவித்த நிலையில் ஈரானிய அணுசக்தி நிலையங்களை தாக்கும் முடிவை அமெரிக்கா நெருங்கி வருகிறதா என்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நான் அதை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். அதாவது நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...