நேபாளத்தில் வெடித்த போராட்டம்.. துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியானதை தொடர்ந்து சமூக வளைத்தளங்கள் மீதான் தடை நீக்கம்!
Nepal Lifts Social Media Ban | நேபாளத்தில் செப்டம்பர் 04, 2025 முதல் சமூக ஊடகங்கள் மீதான தடை அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் மாபெரும் போர்ரட்டத்தை முன்னெடுத்தனர். இதன் காரணமாக அங்கு தற்போது சமூக வளைத்தளங்கள் மீதான தடையை அரசு ரத்து செய்துள்ளது.

இளைஞர்கள் போராட்டம்
காத்மாண்டு, செப்டம்பர் 09 : நேபாளத்தில் (Nepal) சமூக வளைத்தளங்கள்(Social Media) மீதான தடையை நீக்க கோரி ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அங்கு தற்போது சமூக வளைத்தளங்கள் மீதான தடையை அந்த நாட்டு அரசு நீக்கம் செய்துள்ளது. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டை நேற்று (செப்டம்பர் 08, 2025) முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த நிலையில், இளைஞர்களின் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு சமூக வளைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேபாளத்தில் சமூக வளைத்தளங்களுக்கு தடை விதித்த அரசு
நேபாளத்தை தற்போது ஆட்சி செய்து வரும் கே.பி.சர்மா ஒலி அரசு, அங்கு சமூல வளைத்தளங்களை ஒழுங்குப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரின் இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட், 2025-ல் வெளியிடப்பட்டது. அதாவது, நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் அனைத்து சமூக வளைத்தளங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு 7 நாட்கள் அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 28, 2025 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், பல சமூக வளைத்தளங்கள் பதிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆனால், 26 சமூக ஊடகங்கள் பதிவு செய்யாமல் இருந்துள்ளன. இதன் காரணமாக செப்டம்பர் 04, 2025 அன்று பதிவு செய்யப்படாத அந்த சமூக வளைத்தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க : கேன்சருக்கான தடுப்பூசி.. பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு.. குணப்படுத்துமா?
இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய தடை
சமூக வளைத்தளங்கள் மீதான நேபாள அரசின் தடை அந்த நாட்டு இளைய சமூதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் தடையில் பிரபல சமூக வளைத்தளங்களாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவை சிக்கிக்கொண்ட நிலையில், தடையில் சிக்காத டிக் டாக் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களை பயன்படுத்தி அவர்கள் ஒன்று கூடியுள்ளனர். இவ்வாறு ஒன்று கூடிய இளைஞர்கள் பேரணி ஜென்சி என்ற பதாகைகளை ஏந்திக்கொண்டு நேபாள அரசின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
அங்கு இளைஞர்களின் போராட்டம் கையை மீறி சென்ற நிலையில், போலீசார் துப்பாகிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்பு படையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை தொடர்ந்து அங்கு அமைச்சர்கள் அளவிலான அவசர அலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு சமூக வளைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதாக நேபாள அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.