Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்!

துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம் திறக்கப்பட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிரதமர் நரேந்திரமோடி அவர்களால் கற்பனை செய்யப்பட்ட இந்திய கல்வியின் உலகமயமாக்கலை நோக்கிய மற்றொரு பெரிய பாய்ச்சலாக இது அமைகிறது என தெரிவித்துள்ளார். ஐஐஎம் அகமதாபாத் துபாய் வளாகம் இந்தியாவின் சிறந்ததை உலகிற்கு எடுத்துச் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

துபாயில் ஐஐஎம் அஹமதாபாத் வளாகம்.. அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்!
அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Sep 2025 18:04 PM IST

இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமான ஐஐஎம் அஹமதாபாத்தின் வளாகம் ஒன்று துபாயில் திறக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார். மேலும் நேற்று (செப்டம்பர் 10) புதன்கிழமை அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறையின் (ADEK) தலைவர் சாரா முசல்லமை சந்தித்து, இந்திய புலம்பெயர்ந்தோரின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேலும் இந்திய பாடத்திட்ட அடிப்படையிலான பள்ளிகளைத் திறப்பது குறித்து விவாதித்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள தர்மேந்திர பிரதான், ஐஐடி டெல்லியின் அபுதாபி வளாகத்தையும் பார்வையிட்டார். அப்போது இது தனது இரண்டாவது வருகை என்பதை நினைவு கூர்ந்த தர்மேந்திர பிரதான், அது ஒரு கருத்தாக்கத்திலிருந்து முழு அளவிலான வளாகமாக பரிணமிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகக் தெரிவித்தார்.

இப்படியான நிலையில் அவர் மற்றும் சாரா முசல்லம் ஆகிய இருவரும் பரஸ்பர கல்வி முன்னுரிமைகள் குறித்து  பயனுள்ள கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.  அப்போது இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதில் அடல் டிங்கரிங் ஆய்வகங்களின் வெற்றியையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியப் பள்ளிகளின் அடல் புதுமை ஆய்வகங்களை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் தர்மேந்திர பிரதான் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்ட பதிவு

இப்படியான நிலையில் இந்திய புலம்பெயர்ந்தோரின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகமான இந்திய பாடத்திட்ட அடிப்படையிலான பள்ளிகளைத் திறப்பது மற்றும் பள்ளி மட்டத்திலிருந்தே இருவழி மாணவர் பரிமாற்றங்களை எளிதாக்குவது உள்ளிட்ட கல்வியில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆக்கப்பூர்வமான உரையாடல்களை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் சாரா முசல்லம் நடத்தினர்  என்று கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐஐடி டெல்லியின் மதிப்புமிக்க பாரம்பரியத்துடன், இந்த நிறுவனம் அறிவு மற்றும் ஆராய்ச்சியின் கலங்கரை விளக்கமாகவும், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவு கூட்டாண்மையின் கலங்கரை விளக்கமாகவும் செயல்படுகிறது என்பதை தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். ஐஐடி டெல்லி-அபுதாபியின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து யதார்த்தத்திற்கான பயணத்தைக் காட்டும் டிஜிட்டல் சுவரின் வழியாகச் செல்வது தனக்கு தனிப்பட்ட முறையில் திருப்திகரமான தருணம் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்,” என்று கல்வி அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 ஆம் தேதி மறக்க முடியாத நாள்

மேலும் இரு நாடுகளின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கல்வித் துறையில் ஒத்துழைப்புகளை ஆராய்வது, கல்வியில் சிறந்து விளங்குதல் மற்றும் புதுமைகளை வளர்ப்பது மற்றும் கூட்டாண்மைக்கான புதிய வழிகளை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய கல்வி அமைச்சர் பிரதானின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.