எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!

Colombian Airport : இருக்கை தர மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

எனக்கு ஏன் சீட் கொடுக்கல? சட்டென பெண்ணை அறைந்த நபர்.. ஏர்போர்டில் களேபரம்!

கொலம்பியா விமான நிலையம்

Updated On: 

02 Aug 2025 11:26 AM

கொலம்பியா, ஆகஸ்ட் 02 : கொலம்பியா நாட்டின் விமான நிலையத்தில் பெண்ணை, இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருக்கை தர மறுத்ததால், பெண்ணை, அந்த நபர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது. விமான நிலையங்கள், விமானத்தில்  பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.  குறிப்பாக,  நடுவானில் விமானம் சென்றுக் கொண்டிருக்கும் போதே பலரும் சர்ச்சைக்குரிய சம்பவங்களை செய்து வருகின்றன.   இந்த நிலையில், தற்போது கொலம்பியா விமான நிலையத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இருக்கைக்காக பெண்ணை, இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கி இருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதாவது, தென் அமெரிக்கா நாடான கொலம்பியா விமான நிலையம் எப்போது பரபரப்பாகவே இருக்கும்.

இந்த நிலையில் தான் கொலம்பியா விமான நிலையத்தில் கிளாடியா செகுரா என்ற பெண்ணை விமானத்திற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு  ஹெக்டர் சாண்டாக்ரூஸ் என்ற நபரும் இருந்துள்ளார். இவர் தனது மனைவி உடன் அமர்ந்திருந்தார். அப்போது, மனைவி கழிவறைக்கு சென்றதை அடுத்து, கிளாடியா செகுரா அந்த சீட்டில் அமர்ந்தார். இதனால், கடுப்பான ஹெக்டர் சாண்டாக்ரூஸ், அவரை அந்த இருக்கையில் இருந்த எழச் சொல்லி இருக்கிறார். ஆனால், செகுரா அந்த இருக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை.

Also Read : நிலநடுக்கத்திலும் அறுவை சிகிச்சை.. மருத்துவமனையில் டாக்டர் செய்த செயல்.. குவியும் பாராட்டு!

சட்டென பெண்ணை அறைந்த நபர்

பலமுறை ஹெக்டர் கூறியிருந்தார். இருப்பினும், செகுரா சீட்டை விட்டுக் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், சாண்டாக்ரூஸின் கோபமடைந்தார். எழுந்திரு இல்லை என்றால் நான் உன்னை எழுப்புவேன் என கூறியிருக்கிறார். இதனை அடுத்து, சாண்டாக்ரூஸின், பெண் செகுராவின் கன்னத்தில், தலையில் கொடூரமாக தாக்கி இருக்கிறார்.

Also Read : ஒரு குழந்தைக்கு ரூ.50,000.. மக்கள் தொகையை அதிகரிக்க சீனா கையில் எடுத்துள்ள புதிய முயற்சி!

இதனால், அங்கிருந்த மற்ற பயணிகள் பெண் செகுராவை காப்பற்ற முயன்றனர். அப்போது, ஹெக்டர் சாண்டாக்ரூஸுக்கும் அங்கிருந்த பயணிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் ஹெக்டர் சாண்டாக்ரூஸின் மனைவி மன்னிப்பு கேட்டு, பிரச்னையை முடித்தார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.