மயங்கிய ஓட்டுனர்.. வானில் பறந்த பென்ஸ் கார்.. ஷாக்கிங் விபத்தின் வைரல் வீடியோ!!
Viral Video: அதேசமயம், இன்னும் சில மீட்டர்கள் தள்ளி இருந்த பெட்ரோல் பங்கின் மீது அந்த கார் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்த காரை பார்த்த அவசர மீட்புக் குழுவினர், உடனடியாக ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

விபத்துக்குள்ளான கார்
ருமேனியா நாட்டில் நடந்த சாலை விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், மிக அதிவேகத்தில் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒரு ரவுண்டானாவில் எதிர் திசையில், ஏறிச்சென்று பல அடிகள் உயரம் பாய்ந்து, இரண்டு கார்களை மேலே தாண்டி வானில் பறந்து அங்கிருந்த இரும்பு கம்பத்தில் மோதி விழுந்தது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “ஏர் மெர்சிடிஸ்” எனத் தலைப்பிட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். இந்த அதிர்ச்சிரமான விபத்து ருமேனியாவின் ஓராடியா நகரில் கடந்த டிசம்பர் 3ம் தேதியன்று நடந்துள்ளது. 55 வயதான ஓட்டுனருக்கு ஏற்கனவே நீரழிவு பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அவர் காரினை ஓட்டிக் கொண்டிருந்த போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஓட்டுனர் மயங்கிய காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மிக அதிக வேகத்தில் சென்று விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காதலனுடன் கடற்கரையில் குளித்த இளம் பெண்.. சுறா கடித்து பரிதாப பலி!
சிசிடிவி வீடியோவில் அந்தரத்தில் பறக்கும் கார்:
சாலையில் ரவுண்டானா அருகே வந்த பேருந்துக்கு நெருக்கமாக வந்த அந்த கார், அருகே வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மேலே நெருக்கமாக பறந்து செல்வது போன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளன. அதேசமயம், இன்னும் சில மீட்டர்கள் தள்ளி இருந்த பெட்ரோல் பங்கின் மீது அந்த கார் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பலத்த சத்தத்துடன் தரையில் விழுந்த காரை பார்த்த அவசர மீட்புக் குழுவினர், உடனடியாக ஓட்டுனரை காரிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு உடலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், அவர் மருத்துவமனை சென்ற பின்னர் சில சிகிச்சைகளை பெற மறுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் யாருக்கும் காயமில்லை:
இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படாதது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என போலீசார் கூறியுள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய ஓட்டுனரின் உரிமம் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது; மேலும் ரூ.27,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் உண்மை காரணங்கள் குறித்து விசாரணை தொடர்கிறது, வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்.
இதையும் படிங்க : 62 வயதில் காதலியை கரம் பிடித்த ஆஸ்திரேலியா பிரதமர்.. உலக தலைவர்கள் வாழ்த்து!
இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவும் நிலையில், இது சாலைப் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, ஓட்டுநர்களுக்கு கட்டாய உடல்நல பரிசோதனைகள் செய்ய வேண்டிய அவசியம் குறித்து மக்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். திடீரென ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் எவ்வளவு ஆபத்தான விளைவுகளை உண்டாக்க முடியும் என்பதை இந்த விபத்து மிகத் தெளிவாக காட்டி உள்ளது.