ஈரான் அழிக்கப்படும், ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
Iran vs US: ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் ராணுவம் அழிக்கும் என்றும், இதற்காக அமெரிக்க ராணுவம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஈரானுடன் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்பட்டாலும், அணுசக்தி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். .

டொனால்ட் டிரம்ப்
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை முழு பலத்துடன் அழித்து, ஹோர்முஸ் நீரிணையைத் தடுப்பதாக எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் அமெரிக்க ராணுவம் அழிக்கும் என்றும், அமெரிக்க ராணுவம் முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகவும் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் எழுதியிருக்கிறார். மேலும், அணுசக்தி விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது பதிவில், ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது வெளியேறும் எந்தவொரு கப்பலையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க கடற்படை உடனடியாகத் தொடங்கும். ஈரான் எடுத்த இந்த நடவடிக்கை முழு உலகையும் அச்சுறுத்துகிறது. ஆனால், இந்த அச்சுறுத்தலுக்கு அமெரிக்கா அடிபணியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி.. மீண்டும் பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
President Trump on Truth Social: So, there you have it, the meeting went well, most points were agreed to, but the only point that really mattered, NUCLEAR, was not.
Effective immediately, the United States Navy, the Finest in the World, will begin the process of BLOCKADING any… pic.twitter.com/OtgoJyD8AI
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) April 12, 2026
ஈரானுக்கு சட்டவிரோதமாக சுங்க கட்டணம் செலுத்திய அனைத்து கப்பல்களையும் கண்டுபிடித்து இடைமறிக்குமாறு கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத சுங்கக் கட்டணம் செலுத்துபவர்கள் கடற்பரப்பில் பாதுகாப்பாக பயணிக்க முடியாது. ஈரானியர்கள் ஜலசந்தியில் புதைத்துள்ள கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியாக செல்லும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். ஏற்கனவே தங்கள் நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ள இந்தச் சூழ்நிலையை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது வேறு யாரையும் விட ஈரானுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
இதையும் படிக்க : ஈரானில் இருக்கும் இந்தியர்கள் விரைவாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!
மேலும், அவர்களின் கடற்படையும் விமானப்படையும் அழிந்துவிட்டன. கமேனி உட்பட அவர்களின் பெரும்பாலான தலைவர்கள் இறந்துவிட்டனர். இவை அனைத்தும் அவர்களின் அணுசக்தி கொள்கையின் காரணமாகவே நிகழ்ந்தன. ஜலசந்தி மீதான முற்றுகை விரைவில் தொடங்கும். இந்த முற்றுகையில் மற்ற நாடுகளும் பங்கேற்கும். இந்த சட்டவிரோத கொள்ளையிலிருந்து ஈரான் லாபம் ஈட்ட அனுமதிக்கப்படாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாக ஈரான் உறுதியளித்திருந்தது. அவர்கள் தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிவிட்டனர். இது உலகெங்கிலும் உள்ள பல மக்களுக்கும் நாடுகளுக்கும் கவலையையும், துன்பத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.