தீராத முதுகுவலி.. 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி.. அடுத்து நடந்த ஷாக்!

Chinese Woman Eat Live Frogs : நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த 82 வயதான மூதாட்டி ஒருவர், 8 தவளைகளை உயிருடன் விழுங்கியுள்ளார். நாட்டு வைத்தியத்தை நம்பி, அவர் 8 தவளைகளை அவர் விழுங்கியுள்ளார். இதனை அடுத்து, அவர் செரிமான கோளாறுகளால் அவதிப்பட்டுள்ளார்.

தீராத முதுகுவலி.. 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி.. அடுத்து நடந்த ஷாக்!

தவளை

Updated On: 

09 Oct 2025 07:54 AM

 IST

சீனா, அக்டோபர் 09: முதுகுவலியை குணப்படுத்த உயிருடன் இருக்கும் 8 தவளைகளை மூதாட்டி ஒருவர் விழுங்கியுள்ளார். இதனால், அந்த மூதாட்டிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏஐ காலத்திற்கு உலக நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் அனைத்து துறைகளில் நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. குறிப்பாக மருத்துவத்துறை நவீன தொழில்நுட்பத்திற்கு சிகிச்சைகள் இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் இன்றும் பலரும் நாட்டுப்புற வைத்தியங்களை பின்பற்றி வருகின்றனர். இதனால் சில நேரங்களில் உடல் பாதிப்புகளை சிலர் எதிர்கொண்டு வருகின்றனர். அப்படியொரு சம்பவம் தான் சீனாவில் நடந்துள்ளது.

அதாவது, முதுகுவலிக்காக நாட்டுப்புற வைத்தியத்தை நம்பி, சீனாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் 8 தவளைகளை விழுங்கியுள்ளார். இது அவர் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கிறார். சீனாவைச் சேர்ந்தர் 82 வயதான மூதாட்டி ஜாங். இவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் பல்வேறு மருந்துகளை அவர் சாப்பிட்டு வருவதாக தெரிகிறது. இருப்பினும், அவரது முதுகுவலியை சரியாகவில்லை. இதனால், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்பட்ட நாட்டு வைத்தியத்தை பின்பற்ற தொடங்கியிருக்கிறார். உயிருள்ள தவளைகளை விழுங்கினால் முதுகுவலி உடனடியாக குணமாகிவிடும் என மூதாட்டி அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.

Also Read : அணையில் குளிக்கச் சென்ற குடும்பம்.. 6 பேர் நீரில் மூழ்கி பலி

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

இந்த வினோதமான வைத்தியத்தை மூதாட்டி ஜாங் முழுமையாக நம்பியிருக்கிறார். தனது குடும்பத்தினரிடன் சொல்லாமல் அருகில் இருக்கும் நீர்நிலைகளில் தவளைகளை பிடித்துள்ளார். சிறிய சிறிய தவளைகளை அவர் பிடித்திருக்கிறார். முதல் நாளில் மூன்று தவளைகளை பிடித்து சமைக்காமல் உயிருடன் சாப்பிட்டுள்ளார். அடுத்த நாளில் ஐந்து தவளைகளை பிடித்து விழுங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் மூதாட்டி ஜாங் உடலில் அசௌகரியத்தை அனுபவித்தார். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவருக்கு வயிற்று வலி மோசமாக இருந்தது. அதன்பிறகு தான், இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். வயிற்று வலி, வாந்தி போன்றவை அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து, மூதாட்டியை அவரது குடும்பத்தினர் ஹாங்சோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Also Read : அப்படிப்போடு.. தீபாவளிக்கு மவுசு.. கலிபோர்னியாவில் அரசு விடுமுறை!

அங்கு மருத்துவர்கள் அவருக்கு உடல் பரிசோதனை செய்தனர். தவளையை மூதாட்டி விழுங்கியது அவரது வயிற்றில் தவளைகளில் எச்சங்களால் செரிமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவரது வயிற்றில் சில ஒட்டுண்ணிகள் இருந்ததாகவும் கூறினர். இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுபோன்ற நாட்டுப்புற வைத்தியங்கள் ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் உறுப்பு சேதம் உள்ளிட்ட கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.