Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்த நபர்.. ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Gamer Leaves Room a Dump After 2 Years Stay | சீனாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கேமர் ஒருவர் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த நபர் அறையை காலி செய்துள்ள நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் அறையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்த நபர்.. ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குப்பையாக மாறிய ஹோட்டல் அறை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Dec 2025 12:04 PM IST

உலகில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ள நிலையில், அவர்களில் ஒவ்வொரும்தங்களுக்கென வித்தியாசமான குணம் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்டிருப்பர். இவ்வாறு மிகவும் வித்தியாசமான பழக்கங்களை கொண்ட மனிதர்கள் மற்ற மனிதர்களை விடவும் முற்றிலும் வேறு விதமான வாழ்க்கை முறையை கொண்டு இருப்பர். அந்த வகையில், சீனாவில் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நபர் தனது அறையை காலி செய்த பிறகு அதன் நிலையை கண்டு ஹோட்டல் ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மனிதர்கள் வாழவே முடியாத சூழலை கொண்டுள்ள அந்த அறையில் அந்த நபர் எப்படி இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது பலரது கேள்வியாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹோட்டல் அறையை குப்பை கிடங்காக மாற்றிய நபர்

சீனாவின் சாங்சுன் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் உள்ள அறை ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக ஒரு நபர் தங்கியிருந்துள்ளார். ஆன்லைன் கேமரான அவர் சுமார் இரண்டு ஆண்டுகள் அந்த அறையில் தங்கிருந்த நிலையில், டிசம்பர் 12, 2025 அன்று அறையை காலி செய்துள்ளார். வழக்கமாக அறையில் தங்கியிருக்கும் நபர் காலி செய்தால், அந்த அறையை ஹோட்டல் பணியாளர்கள் சுத்தம் செய்வர். அந்த வகையில் அந்த ஆன்லைன் கேமர் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்ற ஹோட்டல் ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : Year Ender 2025: காலநிலை மாற்றத்தால் உலகை உலுக்கிய கடுமையான பேரிடர்கள்

மலைபோல குவித்து வைக்கப்பட்டு இருந்த குப்பைகள்

இரண்டு ஆண்டுகளாக ஹோட்டல் அறையில் தங்கியிருந்த அந்த நபர் ஒரு ஆன்லைன் கேமர் என்றும், அவர் தனது அறையை விட்டு வெளியேறாமல் எப்போதுமே அறையிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் அறையை விட்டு வெளியேறும்போது கழிவறையில் மலைபோல டாய்லெட் பேப்பர்கள், அவர் அமர்ந்து கேம் விளையாடிக்கொண்டு இருந்த இருக்கைகளின் அருகில் பிளாஸ்டிக் மற்றும் உணவு பொருட்களின் குப்பைகள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த அறை வசிப்பதற்கு தகுதியற்ற, குப்பை கிடங்கை போல காட்சியளித்ததை கண்டு ஹோட்டல் ஊழியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : Year Ender 2025: இந்தியர்கள் அதிகமாக பயணம் செய்த டாப் 10 நாடுகள்.. லிஸ்ட் இதோ!

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.