முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!

America Attacked Port In Venezuela | போதைப்பொருள் கடத்துவதாக வெனிசுலா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இது தொடர்பாக போர் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது வெனிசுலா துறைமுகத்தை அமெரிக்கா தாக்கியுள்ளது.

முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

31 Dec 2025 07:51 AM

 IST

வாஷிங்டன், டிசம்பர் 31 : வெனிசுலா (Venezuela) நாட்டில், டிரென் டே அராகுவா என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்த துறைமுகப் பகுதியை அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து தனது செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப், சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார். இந்த நிலையில், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியது குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

படகுகளில் போதைப்பொருட்களை ஏற்றினர் – டிரம்ப்

இது குறித்து தனது செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ள டொனால்ட் டிரம்ப், அவர்கள் படகுகளில் போதைப் பொருட்களை ஏற்றினர். எனவே நாங்கள் அனைத்து படகுகளையும், அவர்கள் பயன்படுத்திய அந்த பகுதியையும் தாக்கியுள்ளோம். அது அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்த இடமாகும். அது இப்போது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : விண்வெளியில் பாலூட்டிகள் இனப்பெருக்கம் செய்ய முடியுமா?.. எலிகளை வைத்து ஆய்வு செய்த சீன விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து வாய் திறக்காமல் உள்ள வெனிசுலா அரசு

அமெரிக்கா அரசின் இந்த தாக்குதல் குறித்து வெனிசுலா அரசு எந்த வித தகவலையும் வெளியிடாமல் உள்ளது. ஆனால், வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரா தலைமையில் நடைபெற்று வரும் அரசை கவிழ்க்க அமெரிக்க முயற்சி செய்து வருவதாக வெனிசுலா அரசு இதுவரை பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் தான், அமெரிக்க அரசு வெனிசுலா மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

இதையும் படிங்க : ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இன்று சந்திப்பு

அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு

முன்னதாக வெனிசுலா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதுமட்டுமன்றி, வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக உள்ளதாகவும், இது தொடர்பாக அந்த நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வெனிசுலா துறைமுக பகுதியை அமெரிக்கா அழித்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை கடினமாக்கியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

Related Stories
10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?