ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் உடல் கருகி பரிதாப பலி!
Afghanistan Refugee Bus Accident | ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு அகதிகள் சிலர் பேருந்து மூலம் நாடு கடத்தப்பட்டனர். இந்த பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், பேருந்தில் பயணம் செய்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து
காபூல், ஆகஸ்ட் 21 : ஈரானில் (Iran) இருந்து ஆப்கானிஸ்தானுக்கு (Afghanistan) அகதிகள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்கள் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 குழந்தைகள் உப்டப 79 அகதிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆபாகானிஸ்தானில் இருந்து வெளியேறி அதன் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பட்ட அகதிகள் பேருந்து விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து – 79 அகதிகள் பலி
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை வெளியேற்றுவதாக அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான், தலீபான்களின் கைவசம் சென்றது. இந்த நிலையில் அங்கு நிலமை மோசமானதால் அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக அங்கு ஆட்சி அமைத்த தலீபான்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தை.. பிரதமர் மோடியிடம் விளக்கிய அதிபர் புதின்..
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மிக கடுமையான ஆட்சி நடத்திய நிலையில், அதற்கு பயந்து பொதுமக்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அங்கும் அந்த மக்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. காரணம், ஆப்கானிஸ்தானில் இருந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்த மக்கள் அந்த நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள்
பாகிஸ்தானில் இருந்து அதிகபட்சமான ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் ஈரானில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளும் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று (ஆகஸ்ட் 20, 2025), அகதிகள் சிலர் பேருந்து மூலம் ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த பேருந்து ஆப்கானிஸ்தானின் ஹெரத் பகுதியில் சென்றுக்கொண்டு இருந்தபோது, ஓட்டுநர் சற்று கண் அசந்துள்ளார்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானை ஒரே மாதத்தில் உலுக்கிய மூன்றாவது நிலநடுக்கம்.. 4.9 ரிக்டர் ஆக பதிவு!
இந்த நிலையில், அகதிகள் சென்ற பேருந்து அதற்கு முன்னே சென்ற லாரியின் மீது மோதி விபத்திக்குள்ளாகியுள்ளது. லாரியின் மீது மோதிய பேருந்து கீழே விழுந்த நிலையில், திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. தீ பேருந்து முழுவதும் பரவிய நிலையில், வெளியே வர முடியாமல் பயணம் செய்தவர்கள் தவித்தனர். இந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.