Viral Video : ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

Man Hit By a Pole By Filming Reels In Moving Train | ஓடிக்கொண்டு இருந்த ரயிலின் வாசலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த நபர், அந்த பாதையில் இருந்த கம்பம் மோதி கீழே விழுந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

வைரல் வீடியோ

Updated On: 

08 Mar 2026 22:39 PM

 IST

சமூக ஊடகங்களில் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் ரயில் படியில் நின்று ரீல்ஸ் எடுத்த நிலையில் கம்பத்தில் மோதி கீழே விழும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்த இளைஞரின் இந்த வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்

தற்போதைய இளைய சமூகத்தினர் மத்தியில் சமூக ஊடக பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்காக அவர்கள் பல ஆபத்தான செயல்களை செய்ய கூட தயங்குவதில்லை. அவ்வாறு ரீல்ஸ் எடுக்க ஆபத்தான முறையை கையாண்டு உயிர் இழந்தவர்களும் உள்ளனர். அந்த வகையில். இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்தபோது கம்பத்தில் மோதி கீழே விழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மெக்சிகோ மெட்ரோவை விட டெல்லி மெட்ரோ சிறப்பாக உள்ளது.. சுற்றுலா பயணி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலில் படியில் தொங்கியபடி ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்கிறார். அப்போது அந்த இளைஞர் கம்பம் ஒன்றின் மீது மோதி கீழே விழுகிறார். அதனை பார்ப்பவர்கள் பதறும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பூசாரியை தலைகீழாக தூக்கி வீசிய யானை.. அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரீல்ஸ் மோகம் இளைஞர்களை எத்தகைய ஆபத்தான பாதையில் அழைத்துச் செல்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
ஹார்முஸ் கடல் வழியை மூடுவதாக ஈரான் அறிவிப்பு - பரபரப்பு தகவல்
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு